சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேராசிரியர் க.அன்பழகன் எப்படி இருக்கிறார்- அப்பல்லோவில் சந்தித்தவுடன் ஸ்டாலின் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

திமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். அவருக்கு வயது 95 ஆவதால் வயது மூப்பு காரணமாக கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

Stalin says that fever reduces to Anbazhagan

இந்நிலையில் நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அன்பழகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் அப்பல்லோவுக்கு சென்றார் ஸ்டாலின்.

பல மாத ஸ்கெட்ச்.. திட்டமிட்டு கொல்லப்பட்ட ஜமால்.. சவுதிக்கு அமெரிக்கா மிரட்டல்.. போர் உருவாகிறதா?! பல மாத ஸ்கெட்ச்.. திட்டமிட்டு கொல்லப்பட்ட ஜமால்.. சவுதிக்கு அமெரிக்கா மிரட்டல்.. போர் உருவாகிறதா?!

அவரை சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது. அவர் சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்க வேண்டி உள்ளது. எனவே அவரை தொண்டர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
MK Stalin meets Anbazhagan in Apollo hospital and says that his fever level decreases after getting treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X