சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் அறிக்கை விட்ட அடுத்த நிமிஷம் தேர்வுகள் ஒத்திவைப்பு... இப்பவே அதிரடியா இருக்கே

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக நடத்தப்பட உள்ள நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த தேர்வுக

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவி வருவதால் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக நடத்தப்பட உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 ஆயிரத்து 906 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிதீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினசரி உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இச்சூழலில் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10 ஆயிரத்து 906 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு நடைபெறுவதாக இருந்தன. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இத்தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

"டிக்" அடித்த ஸ்டாலின்.. யார் அந்த 2 பேர்.. இவர்கள்தான் "அட்வைஸர்களா?".. எகிறும் எதிர்பார்ப்பு

தேர்வுகளை ஒத்திவைக்க அறிக்கை

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சார்பாக, இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10906 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 21-04-2021 முதல் ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும், நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் இத்தேர்வினை நடத்துவது என்பது கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பினை உருவாக்கும். திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இத்தேர்வினை ஒத்திவைப்பதே சரியான முடிவாக இருக்கும்.

தேர்வுகளை ஒத்திவைக்கவும்

தேர்வுகளை ஒத்திவைக்கவும்

இந்த உடற்தகுதி தேர்வினை, இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் எனத் தமிழக அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேதி பின்னர் அறிவிப்பு

தேதி பின்னர் அறிவிப்பு

தற்போது இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு உடற்தகுதித் தேர்வுகள் சில நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது. ஸ்டாலின் அறிக்கை விட்ட சில மணிநேரங்களுக்குள் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

English summary
TamilNadu Uniformed Personnel Selection Board has said that the fitness test for the posts of Second Class Police and Fire Officer will be postponed for some administrative reasons and the date of the examination will be announced later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X