• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ராகுலை பிரதமராக்க நினைத்த ஸ்டாலின்.! தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கனும்.. தமிழிசை வலியுறுத்தல்

Google Oneindia Tamil News
  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு -வீடியோ

  சென்னை: நாங்கள் அமைதியாக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்து கொண்டே தான் இருப்போம் என, தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

  திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிராத்தனை செய்து தங்கத்தேர் இழுத்தார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மேலும் பாஜக சார்பாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.

  Stalin tries to make party leader ineligible for Prime Minister .. tamilisai soundararajan

  இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஒரு கட்சிக்கே தலைவராக நீடிக்க தகுதியில்லாத நபரை தான் திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் நாட்டின் பிரதமராக முன்மொழிந்தார். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாத தவறை ஸ்டாலின் செய்துள்ளார். எனவே தமிழக மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

  முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

  வெற்றி பெற்ற போதெல்லாம் ராகுல் குடும்பத்தினர் பதவி சுகத்தை அனுபவித்தனர். இப்போது தொடர்ந்து பல ஆண்டுகள் எதிர்கட்சியாக இருப்பதால், காங்கிரஸை வழிநடத்த கூட தயங்குகின்றர். இதை மக்கள் புாிந்து கொள்ள வேண்டும் என்றார்.

  தமிழக பாஜக சார்பாக மீண்டும் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவக்கப்படும். பிரதமர் மோடி சொன்னதை போல வாக்குச்சாவடி ஒன்றுக்கு 5 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக பாஜக தொண்டர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாக கூறினார்.

  தங்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை என்பது சமூக அக்கறை நல்லிணக்கம் மற்றும் சேவை மனப்பான்மையோடு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நாங்கள் ஆரம்பிக்கிறோம். பிற கட்சியினர் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள் ஆனால் நாங்கள் அமைதியாக தமிழக மக்களுக்கான சேவையை செய்து கொண்டிருப்போம்.

  உச்சநீதிமன்றம் பிராந்திய மொழிகள் அறிக்கையை வெளியிடுவது வரவேற்கத்தக்கது தற்போது தான் மாநில மொழிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் முக்கியத்துவம் தர துவங்கியுள்ளார்கள். எனினும் தமிழுக்கும் தமிழர்க்கும் முதலிலேயே முக்கியத்துவத்தை தந்திருக்க வேண்டும்.எல்லா மொழிகளையும் விட இனிமையானது நம் மொழி .

  எங்களுக்கு கிடைத்த தகவல் அடுத்து அறிவிப்பில் தமிழும் இடம்பெறும் என்பது தான். எனினும் முதல் பட்டியலிலேயே தமிழ் இருந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார்

  English summary
  We will remain silent and serve the people, ”Tamil Nadu BJP state president
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X