சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்டாசு வெடிக்க விதித்த தடையை திரும்ப பெறுமாறு ராஜஸ்தான் அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: பட்டாசு வெடிக்க ராஜஸ்தான் அரசு விதித்த தடையை திரும்ப பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரானா தொற்றைக் காரணம் காட்டி பட்டாசு வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு தடை போட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

Stalin urges Rajasthan government to lift ban on fireworks

இந்தப் பேரிடரால் ஏற்கனவே பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தயாரிப்பாளர்களும் பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தடுமாற்றத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.

இப்படியொரு துயரம் மிகுந்த சூழலில், தீபாவளிப் பண்டிகைதான் அவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கிறது.

ஸ்டாலின் காரை மறித்தாரா தனியரசு.. ஒரே நேரத்தில் 3 ஸ்டாலின் காரை மறித்தாரா தனியரசு.. ஒரே நேரத்தில் 3 "துண்டு"?.. கொங்குமண்டலம் திமுகவுக்கு கிடைச்சிருமோ

ஆனால் அந்தப் பண்டிகைக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று போடப்பட்டுள்ள இந்தத் தடை ஒட்டுமொத்த பட்டாசு தொழிலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் கருதி பட்டாசு வெடிக்க விதித்திருக்கும் தடையை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
dmk leader Stalin urges Rajasthan government to lift ban on fireworks. he said that It is sad that the Rajasthan government has banned the use of firecrackers due to the Korana epidemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X