சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களை இழிவுபடுத்திய திருமாவளவனை ஆதரிக்கும் ஸ்டாலின் - எல். முருகன் குற்றச்சாட்டு

பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்துள்ளார் ஸ்டாலின் என்று மாநில பாஜக தலைவர் எல். முருகன் புகார் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை கொச்சப்படுத்திய கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுக்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பு உள்ளது என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார். பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்துள்ளார் ஸ்டாலின் என்றும் புகார் கூறியுள்ளார்.

சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலுவலகம் அமைந்துள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், "கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்பவர்களை கண்டிக்க வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை கொச்சப்படுத்திய கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலுக்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பு உள்ளது இதுவரை கறுப்பர் கூட்டத்தினரை கண்டிக்கவேயில்லை ஸ்டாலின் என்று குற்றம் சாட்டினார்.

Stalin who supports Thirumavalavan who degraded women says BJP Murugan

அதேபோல் பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனுக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்துள்ளார் ஸ்டாலின். பட்டியலின மக்களை கண்டித்தாலும் கண்டிக்க மாட்டார். பெண்களை இழிபடுத்தினாலும் ஸ்டாலின் கண்டிக்க மாட்டார். இதன் மூலம் ஸ்டாலின் தவறு செய்பவர்களை காப்பாற்றுபவராகவே உள்ளார் என்றும் தெரிவித்தார் முருகன்.

விசிக தலைவர் திருமாவளவன் பெண்களை குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஆனால் மனுதர்ம நூல்களில் பெண்களை குறித்து கூறியதை தான் திருமாவளவன் சொன்னதாகவும் அவர் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள முருகன் திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

English summary
BJP state president L Murugan said that the black mob that desecrated the Kanda Sashti armor had links with the YouTube channel and Stalin. Murugan has blamed also complained that he had openly supported Thirumavalavan, who spoke disparagingly of women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X