சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையத்துடன் அனைத்து கட்சி கூட்டம்.. முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று நடக்கிறது அனைத்து கட்சி கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.. மாநில தேர்தல் ஆணையத்தில் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் இந்த ஆலோசனை கூட்டமானது, தலைமை தேர்தல் அதிகாரி பழனிக்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க போகிறது.. 2 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 14க்குள் முதல்கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் வார்டுகள் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றன.

பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்.. பிப்.20இல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு.. இது தான் காரணம் பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்.. பிப்.20இல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு.. இது தான் காரணம்

வார்டுகள்

வார்டுகள்

அதேபோல, இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை பிரித்து, நேற்றுமுன்தினம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது... குறிப்பாக, பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுவிட்டது.. இதையடுத்து, தேர்தல் தொடர்பான பணிகளில், மாநில தேர்தல் கமிஷன் கவனம் செலுத்தி வருகிறது.

 அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள்

தேர்தல் தேதியை அறிவிக்கவும் தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. எனினும், அதற்கு முன்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் கூட்ட அரங்கில் பகல் 11:30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. மாநில தேர்தல் ஆணையத்தில் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி பழனிக்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

 தேர்தல் தேதி

தேர்தல் தேதி

இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், அரசியல் கட்சிகள் எடுத்துரைக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கேட்டு, அதை தேர்தலில் செயல்படுத்தவும் மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.. இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் தேர்தல் தேதிகளை அறிவிக்கவும் கமிஷன் திட்டமிட்டு வருகிறது.

அதிமுக

அதிமுக

திமுகவை பொறுத்தவரை ஒரு வார்டுக்கு 50 முதல் 75 விருப்ப மனுக்கள் வந்துள்ளதாக தெரிகிறது.. எனிநனும் அது தொடர்பான இறுதிக்கட்ட பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள உள்ளனர்.. அதேபோல, அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்... இதையடுத்து விரைவில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.

English summary
State election commission today held consultations with all party Meeting regarding urban local body elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X