சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து புதிய பாடப் புத்தகங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து கொள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு. புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

State Goverment Allowing to Tamil Nadu Textbook Corporation raise the price of new textbooks

இந்த பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில் 1, 3, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன.

இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்காக 2, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டுள்ள இந்த பாடப் புத்தகங்கள் 80 ஜிஎஸ்எம் தாளில் அச்சிடப்பட்டுள்ளன.

முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை!முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை!

இதன்படி 40-52 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு ரூ.30 விலையும், 56-72 பக்கம் கொண்டு புத்தகத்துக்கு ரூ.40 விலையும், 76-92 பக்கம் கொண்ட புத்தகம் ரூ.50 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

96-116 பக்கம் கொண்ட புத்தகத்தின் விலை ரூ.60, 120-136 பக்கம் கொண்டு புத்தக விலை ரூ.70 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 352 முதல் 368 பக்கங்கள் கொண்ட ஒரு பாடப் புத்தகத்தின் விலை ரூ.180 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu Textbook Corporation has got the approval to fix and icrease the price of new books
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X