BREAKING NEWS LIVE - திண்டுக்கல் சீனிவாசன் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி.. ஸ்டாலின் பிரச்சாரம்
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக, வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். எனவே வேட்பாளர்கள் வரிசை வரிசையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்து கடமையை நிறைவேற்ற உள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவுக்கு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களுக்காக இந்த லைப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை அனுமதிப்பதில் தாமதம் செய்ததாக புகார்
ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் தாமதம் குறித்து தட்டிக் கேட்ட செந்தில் பாலாஜி ஆவேசம்
கோபத்துடன் முன்னேறிய செந்தில் பாலாஜியை டிஎஸ்பி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
வேண்டும் என்றே காவல்துறையினர் தங்களைத் தடுத்ததாக திமுக, காங்கிரஸார் புகார்