சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது அதைவிட மோசமாம்! ஓமிக்ரானையே தூக்கி சாப்பிடும் ஸ்டெல்த் ஓமிக்ரான்.. எக்ஸ்பர்ட்ஸ் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவிலும் பல்வேறு உலக நாடுகளிலும் ஓமிக்ரான் கேஸ்களை விட ஸ்டெல்த் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஓமிக்ரானை அப்புறப்படுத்தி விரைவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆதிக்கம் மிக்க கொரோனாவாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் எனப்படும் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இது கொரோனா வைரஸின் உட்பிரிவு ஆகும். ஓமிக்ரானில் மொத்தமாக மூன்று உட்பிரிவு உள்ளது. அவை BA.1, BA.2, மற்றும் BA.3. இதில் இந்தியாவில் BA.1 பரவி வருகிறது.

இதில் BA.1 வகை ஓமிக்ரான்தான் முதலில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது. ஓமிக்ரான் BA.2 என்பதுதான் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும்.

நம்பிக்கை.. சர்வதேச அளவில் மளமளவென சரியும் கொரோனா கேஸ்கள்.. முடிவிற்கு வரும் ஓமிக்ரான் அலை? நம்பிக்கை.. சர்வதேச அளவில் மளமளவென சரியும் கொரோனா கேஸ்கள்.. முடிவிற்கு வரும் ஓமிக்ரான் அலை?

ஸ்டெல்த் ஓமிக்ரான்

ஸ்டெல்த் ஓமிக்ரான்

இதை ஆராய்ச்சிக்கு உட்பட்ட ஓமிக்ரான் வகை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.ஓமிக்ரான் BA.1 மற்றும் BA.2 இரண்டுக்கும் ஒரே மாதிரியான 32 ஸ்டிரெயின் உள்ளது. ஆனால் BA.1 வகை ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்காது. இதனால் ஆர்டி பிசிஆர் சோதனையில் எஸ் ஜீன் இல்லை என்றால் அதை ஓமிக்ரான் என்று கூறிவிடலாம். ஆனால் BA.2 வகை ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்கும். இதனால் ஆர்டி பிசிஆர் சோதனையில் ஓமிக்ரான் தான் தாக்கி உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியாது. இப்படி ஆர்டிபிஆர் சோதனையில் BA.2 வகை ஓமிக்ரானை உறுதி முடியாது என்பதால்.. இதற்கு ஸ்டெல்த் ஓமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதிகம்

அதிகம்

இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு உலக நாடுகளிலும் ஓமிக்ரான் கேஸ்களை விட ஸ்டெல்த் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் சார்ஸ் கோவிட் ஜீனோம் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்களை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டெல்த் ஓமிக்ரான் கேஸ்கள் அப்புறப்படுத்தி வருகிறது. அதாவது ஸ்டெல்த் ஓமிக்ரான் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆதிக்கம் மிக்க வைரஸாக மாறலாம். இப்போது வரை ஓமிக்ரான், ஸ்டெல்த் ஓமிக்ரான் இரண்டும் பெரிய அளவில் அறிகுறிகளை ஏற்படுத்தவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனை கேஸ்களும், ஐசியூ கேஸ்களும் தமிழ்நாட்டில் உயர தொடங்கி உள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. பனாரஸ் பல்கலையின் வைராலஜி நிபுணர் சுனித் கே சிங் அளித்த பேட்டியில், ஸ்டெல்த் வகை கொரோனாவில் எஸ் ஜீன் டிராப் இல்லை.

எஸ் ஜீன்

எஸ் ஜீன்

அதாவது இந்த ஸ்டெல்த் வகையில் எஸ் ஜீன் இருக்கிறது. இதனால் ஆர்டிபிசிஆர் சோதனையில் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியாவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. ஏனென்றால் பலருக்கு எஸ் ஜீன் டிராப் இல்லாமல் மைல்ட் கொரோனா ஏற்படுகிறது. இது டெல்டாவாக இருக்க வாய்ப்பு இல்லை. இது பெரும்பாலும் ஸ்டெல்த் வகையாக இருக்கலாம். டென்மார்க், யு.கே, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற பலவேறு உலக நாடுகளிலும் இந்த ஸ்டெல்த் வகை கொரோனா பரவி வருகிறது.

சிக்கல்

சிக்கல்

இதனால் ஆர்டிபிசிஆர் சோதனையில் என்ன வகை கொரோனா தாக்கி உள்ளது என்று தெரிவது இல்லை . டெல்டா வகையா, ஸ்டெல்த் ஓமிக்ரான் வகையா என்று தெரியவில்லை. இது கொரோனா சிகிச்சையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் ஓமிக்ரான் கொரோனாவிற்கு சில வகை சிகிச்சைகள் பலன் அளிக்கிறது. ஆண்டிபாடி கலவை சிகிச்சைகள் இதற்கு பலன் அளிக்காது. எனவே ஸ்டெல்த் வகை ஓமிக்ரானை கண்டறிய புதிய வழிகளை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுகிறது

மாற்றுகிறது

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள டெல்லி ஸ்ரீ கங்காராம் மருத்துவமனை சீனியர் வைரலாஜி மருத்துவர் தீரன் குப்தா, ஸ்டெல்த் ஓமிக்ரானை கண்டுபிடிக்க முடியாதது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக தோன்றுகிறது . ஸ்டெல்த் ஓமிக்ரானை கண்டறிய புதிய சோதனை கருவிகளை கொண்டு வர வேண்டும். Omisure போன்ற தனிப்பட்ட கருவிகளை கொண்டு வர வேண்டும். ஸ்டெல்த் ஓமிக்ரான் இப்போது ஒரிஜினல் ஓமிக்ரானை மாற்றி வருகிறது. விரைவில் இந்தியாவில் 80 சதவிகிதம் ஸ்டெல்த், 20 சதவிகிதம் ஒரிஜினல் ஓமிக்ரான் என்ற நிலை வரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Stealth Omicron may replace the Original omicron Coronavirus in India soon says experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X