சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்டிஓ ஆபிஸுக்கே போகாம.. வீட்டில் இருந்தபடியே டிரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கே செல்லாமல் உங்கள் டிரைவிங் லைசன்ஸை புதுப்பிப்பது எப்படி?

பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறும் போது எடுக்கும் ஆண்டுடன் 20 ஆண்டுகளை கூட்டுவது, 50 வயதுக்கு மேல் இருக்கும் விண்ணப்பதாரரின் 5 ஆண்டுகள் வரை என லைசன்ஸின் காலாவதியாகும் காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த காலம் முடிவதற்குள் ஓரிரு மாதங்கள் இருக்கும் போது நம் லைசன்ஸை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அதாவது Renewal செய்வதாகும். இதற்காக ஒருவர் தங்கள் தாலுக்காவுக்கான வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள ஊழியரிடம் ரினுவல் செய்வதற்கான அனைத்து ஆவணங்கள், அரசு கட்டணம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து செய்து கொள்ளலாம்.

டிரைவிங் லைசன்ஸ்

டிரைவிங் லைசன்ஸ்

இதற்கெல்லாம் அலைய முடியாது என நினைத்தால் டிரைவிங் ஸ்கூல் நிர்வாகியையோ அல்லது ஏஜெண்ட்டையோ பிடித்து அவர் கேட்கும் நகல்களை கொடுத்துவிட்டால் போதும் நாம் போய் புகைப்படம் எடுத்துக் கொண்டு கையெழுத்து போட வேண்டியதுதான் பாக்கி. ஆனால் இந்த முறைக்கு அரசு கட்டணத்துடன் அந்த ஏஜெண்ட்டுக்கோ அல்லது டிரைவிங் ஸ்கூலுக்கோ குறிப்பிட்ட சேவைக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஆபிஸுக்கு போக வேண்டாம்

ஆபிஸுக்கு போக வேண்டாம்

தற்போது ஆபிஸுக்கும் போக வேண்டாம், ஏஜெண்ட்டையும் அணுக வேண்டாம். ஆன்லைனிலேயே நம் டிரைவிங் லைசன்ஸை புதுப்பித்துகொள்ளலாம். இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். parivahan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு உங்கள் ஆதார் அட்டையை சரி பார்க்க வேண்டும். அதில் கீழ்கண்ட வசதிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 டிரைவிங் லைசன்ஸ்

டிரைவிங் லைசன்ஸ்

Driving License மற்றும் வாகன பதிவுக்கு வேறு எந்த ஆவணங்களையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழை (ஆர்சி) ஆதார் எண்ணுடன் இணைக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் பிறகு ஆதார் சரிபார்ப்பு மூலம் ஆன்லைன் சேவைகளை பெறலாம். இது தவிர டிஜிட்டல் செய்யப்பட்ட சி ல சேவைகள் உள்ளன. அதாவது வாகன பதிவு நகல் சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம், வாகன பதிவு சான்றிதழுக்கு ஆட்சேபமில்லா சான்று (NOC)வழங்குவதற்கான விண்ணப்பம், மோட்ட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம், வாகன பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற அறிவிப்பு உள்ளிட்டவை உள்ளன.

18 விதமான சேவைகள்

18 விதமான சேவைகள்

இந்த ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தினால் வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்களுக்கு 18 விதமான சேவைகள் கிடைக்கும். எல்எல்ஆர் விண்ணப்பம், ரினுவல் விண்ணப்பம், காப்பி ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பம், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், சர்வதேச ஓட்டுநர் உரிம அனுமதி பத்திரத்தை பெறுவது உள்ளிட்டவையாகும். இந்த ஆன்லைன் சேவைகள் அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் டிஜிட்டல்மயமாகிவிட்டவுடன் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

English summary
How to renew a driving License Online: Check the Online Steps to Renew your Driving License in India in Less than 15 Minutes, as soon as it expires to continue driving on public roads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X