சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஸ்டெர்லைட் ரூ.5 கோடி.. நன்கொடையாளர் லிஸ்ட் இதோ

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக முதல்வர், பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

Sterlite copper company gives 5 crores rupees to Tamil Nadu CM relief fund

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள், மற்றும் பொதுமக்களிடம் இருந்து 13-4-2020 வரை மொத்தம் ரூ.134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வரை பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 14ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஏழு நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் மனமுவந்து நிதி உதவி வழங்கியவரின் விபரங்கள்:

  • ஸ்டெர்லைட் காப்பர் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி- 5 கோடி ரூபாய்
  • சுந்தரம் பாஸ்ட்னார்ஸ் நிறுவனம்- 3 கோடி ரூபாய்
  • ஐடிசி எஜுகேஷன் - 2 கோடி ரூபாய்
  • தி சன்மார் குரூப் - 1 கோடி ரூபாய்
  • ஆச்சி மசாலா புட்ஸ் நிறுவனம் - 1 கோடியே 10 லட்சம் ரூபாய்
  • தமிழ்நாடு அரசு e-payments - 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்
  • தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் - 77 லட்சத்து 30 ஆயிரத்து 543 ரூபாய்
  • இயக்குனர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை - 64 லட்சத்து 74 ஆயிரத்து 852 ரூபாய்
  • கிரிஸ்டி ப்ரைட் கிராம் நிறுவனம் - 50 லட்சம் ரூபாய்
  • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை- 31 லட்சம் ரூபாய்
  • தி சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் - 31 லட்சம்

இவ்வாறு அந்த பட்டியல் நீளுகிறது. மேற்கண்ட 7 நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் வரை பெற்றுள்ளது.

இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சம் 74 ஆயிரத்து 572 ரூபாய். இதுவரை நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், தொடர்ந்து அரசு ஆதரவு அளித்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு, செய்தி மக்கள் தொடர்பு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா.. ஒரு குட் நியூஸ்.. ஒரு பேட் நியூஸ் இருக்கு இந்தியாவில் கொரோனா.. ஒரு குட் நியூஸ்.. ஒரு பேட் நியூஸ் இருக்கு

English summary
Tuticorin Sterlite copper Limited group has given 5 crore rupees to Tamil Nadu CM relief fund to fight against coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X