சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாசகார ஸ்டெர்லைட் ஆலை.. ஒரு பய டேட்டா!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. மக்கள் வெறுக்கும் இந்த நாசகார ஆலை, அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்திற்குள் நுழைந்தது. அதுகுறித்து ஒரு சுருக்கமான பார்வை...!

sterlite copper - a fear data

உரிமையாளர் - சுனில் அகர்வால்

வசிப்பிடம் - லண்டன்

விருப்பம்- இந்தியாவில் தாமிர உருக்கு ஆலை ஒன்றை நிறுவ வேண்டும்

இடம் தேடிய மாநிலங்கள் - குஜராத், கோவா

ஆலை ஆரம்பித்த இடம் - மகாராஷ்டிரா

அப்போதைய மகாராஷ்டிரா முதல்வர் - சரத்பவார்

மகாராஷ்டிராவில் முதற்கட்ட முதலீடு - ரூ.2000 கோடிகள்

அமைவிடம் - ரத்தினகிரி

எதிர்ப்பு - விவசாயிகள்

காரணம் - சுற்றுச்சூழல் பாதிப்பு

தடை விதிக்கப்பட்ட நாள் - 01-05-1994

மீண்டும் ஆலை அமைந்த இந்திய மாநிலம் - நம்ம தமிழகம்

அனுமதி அளித்தவர் - ஜெயலலிதா

அடிக்கல் நாட்டிய தேதி - 30-10-1994

ஆலை செயல்பட தொடங்கிய வருடம் 1996

2010 ம் ஆண்டு - ரூ. 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் இந்நிறுவனத்தின் துணைத்தலைவர் வரதராஜன் கைது.

28.9.2010 - ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

23-03-13 - ஆலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் தூத்துக்குடி மக்கள் மூச்சு

திணறல்

இதைத் தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆலைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து ஆலையை இயங்க அனுமதிக்கிறது. இந்தியாவின் தாமிர உற்பத்தியே ஸ்டெர்லைட்டை நம்பித்தான் உள்ளது என்பது சொத்தை வாதம் ஏனெனில் இந்தியாவில் 1992- ம் ஆண்டு இந்திய தாமிர உற்பத்தித் துறை தனியார் முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டது.

இதன் பிறகு 1996-ல் 62,000 டன்னாக இருந்த தாமிர உற்பத்தி 2007-ல் 9.97 லட்சம் டன்னாக உயர்ந்து வந்தது. இப்போதும் கூட இந்தியாவின் தாமிர தேவை ஆண்டுக்கு 4 லட்சம் டன் மட்டுமே. ஆனால் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தாமிரமும் தாமிரப் பொருட்களும் சுமார் 4 லட்சம் டன். அதனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அது உற்பத்தி செய்யும் சுமார் 4 லட்சம் டன் தாமிரம் நின்று போனாலும் நாட்டுக்குத் தேவையான தாமிரத்தின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த வருடம் மே மாதம் ஒரு அரச பயங்கரவாதமே நிகழ்ந்தது. ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னதாக நடந்த நூறு நாள் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாததன் விளைவு சொந்த மக்களையே சுட்டுக் கொன்றது அரசு.

அதற்கடுத்தும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது இதில்தான் இன்று தீர்ப்பு வந்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தும் ஆலையை திறக்க தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

English summary
A bio date of dangerous Sterlite plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X