சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்

Google Oneindia Tamil News

சென்னை: ஹிந்திதான் நாட்டை இணைக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னாலும் சொன்னார், டிவிட்டரில் தமிழக நெட்டிசன்கள் உட்பட தென் இந்திய நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.

#StopHindilmposition என்ற டேக் மற்றும் #தமிழ்வாழ்க என்ற டேக்குகளை பயன்படுத்தி தமிழ் நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக ரொம்பவே உக்கிரமாக இருப்பது கன்னடர்கள்தான் என்பதை ட்வீட்டுகள் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் தெரிகிறது.

பாஜக தெற்கே வலுவாக உள்ள ஒரே மாநிலம் கர்நாடகாதான். அங்கேயும், ஹிந்தி திணிப்பை சொல்லி, பெரும் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது அந்த கட்சி என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இதோ சில காரசாரமான ட்வீட்டுகளை நீங்களே பாருங்கள்.

வெடித்தது போராட்டம்

#StopHindilmposition என்பது வெறும் ட்விட்டர் டிரெண்ட் மட்டும் கிடையாது. கர்நாடகாவில் ரியல் விவகாரம் அதுதான் என கூறும் இந்த நெட்டிசன், போராட்ட படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும்

70148வது ஆண்டு பிறந்தாலும், தமிழகத்தில் இப்படித்தான் இந்தி கற்றுக்கொண்டு இருப்பார்கள் என்று சொல்லி, ரகு தாத்தா என தப்பும் தவறுமாக ஒருவர் இந்தி படிக்கும் காமெடி காட்சியை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன். குசும்புதான் போங்க.

எது அதிகம்

எண்ணிக்கை அடிப்படையில், புலியை விட நாய் அதிகம் என்பதால், அதை தேசிய விலங்காக அறிவித்துவிட முடியுமா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

தமிழ் வாழ்க

ஹிந்தி திவாஸ்...இருந்துட்டு போ #தமிழ்வாழ்க என்று சொல்கிறார் இந்த பெண் நெட்டிசன்.

இந்திக்கு எதிராக ஒற்றுமை

நமக்குள்ள தண்ணிக்கு அடிச்சிகிட்டாலும், இந்திய திணிக்கனும்னு வந்தா, தமிழர்களோடு கைய கோர்த்து தூக்கிப்போட்டு மிதிக்கிறாங்கப்பா கன்னடிகாஸ்
👌 என்று சொல்கிறார் இந்த பெண் நெட்டிசன்.

கனிமொழியும் கண்டனம்

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்பது நாட்டை ஒருபோதும் ஒருங்கிணைக்காது . One India can never be possible with One language. இப்படி சொல்பவர் திமுக எம்.பி. கனிமொழி.

English summary
Karnataka is the only state in the south where the BJP is strong. Even there, it is only certain that the party has suffered a major setback in terms of Hindi stuff. Here's a look at some of the nicest tweets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X