சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாயத்தேவர் கண்ட சின்னம்.. எம்ஜிஆர் வென்ற சின்னம்.. இப்படித்தான் பிறந்தது இரட்டை இலை!

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உருவானது எப்படி தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: வேரூன்றி விருட்சமாக விரிந்திருக்கும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தின் கதை தெரியுமா?

இந்த சின்னம் உருவாக காரணமே மாயத்தேவர் என்பவர்தான். இவர் தீவிர எம்ஜிஆர் விசுவாசி. இவர்தான் அதிமுகவின் முதல் வேட்பாளர். சென்னை ஐகோர்ட்டின் வக்கீலாக இருந்தவர்.

கணக்கு கேட்டதால் பிரச்சனை வெடித்து திமுகவில் இருந்து வெளியே வந்து எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவில் இணைந்தார். 1973-ல் திண்டுக்கல் தொகுதிக்கு ஒரு இடைத்தேர்தல் வந்தது. திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் என்பவர் போட்டியிட தயாரானார்.

புதுக்கட்சி

புதுக்கட்சி

ஆனால் நாட்டு மக்களே புதுக்கட்சி ஆரம்பித்த எம்ஜிஆர் என்ன செய்ய போகிறார், போட்டியிடுவாரா? மாட்டாரா? போட்டியிட்டாலும் ஜெயிப்பாரா? மாட்டாரா என்ற ஆர்வம் எழுந்துகொண்டே இருந்தது. அதுவும் இல்லாமல் தன் பலத்தை தனித்து காட்ட வேண்டிய நிர்பந்தமும் எம்ஜிஆருக்கு அப்போது ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கு நிறுத்திய வேட்பாளர்தான் மாயத்தேவர்.

எந்த சின்னம் வேண்டும்?

எந்த சின்னம் வேண்டும்?

கட்சி ஆரம்பித்தாயிற்று, வேட்பாளரும் ரெடி.. ஆனால் கட்சிக்கு தேர்தல் சின்னம் இல்லை. அதனால் அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் சிரியாக் என்பவர் வேட்பாளர் மாயத்தேவரை அழைத்து சின்னம் பற்றி பேசினார். கிட்டத்தட்ட 16 சின்னங்களை காட்டி, இதில் எது வேண்டும் என்று கேட்டார் கலெக்டர். அதில் 7-வது இடத்தில் இரட்டை இலை சின்னம் இருந்தது. அதைதான் மாயத்தேவர் டிக் செய்து கலெக்டரிடம் தந்தார். பிறகு எம்ஜிஆரிடம் இந்த விஷயத்தை போய் சொன்னதும், "நிறைய சின்னங்கள் இருக்கே? எதுக்கு இந்த இரட்டை இலை" என்று எம்ஜிஆர் கேட்டார்.

விக்டரி

விக்டரி

அதற்கு மாயத்தேவர், "இல்லை தலைவரே.. 2-ம் உலக போரில் வெற்றி பெற்ற வின்சென்ட் சர்ச்சில் எப்போதும் இரண்டு விரலை காட்டுவார். அதன் அடையாளம் விக்டரி (Victory) என்பதாகும். நீங்களும் ரெண்டு விரலை காட்டுங்கள். ஜனங்க அதை புரிந்துகொண்டு சின்னத்தை கண்டுபிடித்து ஓட்டு போடுவார்கள்" என்றார்.

இரண்டு விரல்

இரண்டு விரல்

இதையடுத்துதான் எம்ஜிஆர் இரட்டை இலை சின்னத்தை ஒப்புக் கொண்டு, இரண்டு விரல்களையும் பொதுமக்களிடம் காட்ட ஆரம்பித்தார். இப்படித்தான் இரட்டை இலை சின்னம் பிறந்தது. கடைசியில் மாயத்தேவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார். இவரிடம் அன்று பிஏவாக இருந்தவர்தான் இப்போதைய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என்பது கூடுதல் போனஸ் தகவல் ஆகும்!

English summary
Mayathevar is the reason for the Two Leaf symbol of ADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X