சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்மாளுங்களுக்கு சபலம் வந்துட்டா? "தாவுவாங்களே".. கண்காணியுங்கள்.. முதல்வரின் உத்தரவு

சசிகலா வகையினால் அதிமுக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் வருகை அதிமுகவை நிறைய அசைத்து வருவதாக தெரிகிறது.. அதையொட்டி சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.. இப்போதும் ஒரு தகவல் அப்படித்தான் கசிந்து வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியில் இன்னும் சுமூக முடிவை எட்டப்படாத நிலை உள்ளது.. அதனால், நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒரு முடிவு எட்டப்படும் என்றும் நம்பப்பட்டது..

அப்படி ஒரு விஷயமே அன்று நடக்கவில்லை. அதேபோல, சசிகலா வருகை குறித்தும் பொதுக்குழுவில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பற்றியும் பேசப்படவில்லை.

"ஐயா பதில் சொல்லுங்க".. மொத்தம் 6 கேள்விகள்.. குரல் கொடுக்கும் "வன்னிய குல இளைஞன்".. முரசொலி அதிரடி

அதிமுக

அதிமுக

ஆனால், சசிகலா வருகை குறித்து எப்போது முதல்வரிடம் கேட்டாலும், அவரது வருகை அதிமுகவை எந்த வகையிலும் பாதிக்காது என்று மட்டும் சொல்லியபடியே இருந்தார்... எடப்பாடியார் அப்படி சொல்லிலவிட்டாரே தவிர, உள்ளுக்குள் ஒரு கலக்கம் இருப்பதாகவு சொல்லப்பட்டது.. 27-ம் தேதி சசிகலா வெளியே வர போகிறார். அதனால், எப்படியும் அதிருப்தியில் உள்ளவர்கள் சசிகலா பக்கம் தாவலாம் என்றும் சலசலப்பு இருந்து வருகிறது.. குறிப்பாக, 32 எம்எல்ஏக்கள் எப்படியும் சசிகலா பக்கம் தாவக் கூடும் என்று முதல்வரின் பார்வைக்கு தகவல் சென்றதாம்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

அதனால், இவர்களை தீவிரமாக கண்காணிக்க ரகசியமாக உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படியே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மட்டுமின்றி, மாவட்ட செயலர்கள், மண்டல பொறுப்பாளர்களின் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளை, மாநில அரசின் உளவுத்துறை போலீசார் கண்காணித்தும் வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. நடந்து முடிந்த பொதுக்குழுவில் சசிகலா விடுதலை குறித்து பேசுவதற்கு ஓபிஎஸ் ஆர்வம் காட்டினாராம்.. ஆனால், அதை பற்றி தனியாக விவாதிக்கலாம், கூட்டத்தில் வேண்டாம் என்று எடப்பாயார்தான் சொன்னாராம்.

ஆலோசனை

ஆலோசனை

அதன்படியே, அன்றைய தினம் மாலை, தலைமை அலுவகத்திலேயே முதல்வர், துணை முதல்வர், உட்பட அமைச்சர்கள், நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்ட கூட்டம் நடந்துள்ளது.. அப்போது சசிகலா வருகையும் விவாதிக்கப்பட்டதாம்... சசிகலா வெளியே வந்தாலும் யாரும் அவருடன் செல்ல ரெடியாக இல்லை.. ஏனென்றால் சசிகலா மீது இன்னும் நிறைய கேஸ்கள் இருக்கின்றன என்று சில மூத்த அமைச்சர்கள் கருத்து சொன்னார்களாம்.

 கண்காணிப்பு

கண்காணிப்பு

அதற்கு எடப்படியாரும், "சிலர் விடுதலையாகி வெளியே வருவதால், அவருடன் செல்ல சிலருக்கு சபலம் ஏற்படலாம்.. அப்படிப்பட்டவர்களை நம்முடைய மாவட்ட செயலாளர்கள்தான் அடையாளம் கண்டு கண்காணிக்க வேண்டும்" என்று கூறினாராம்.. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தது என்று தெரியவில்லை.... ஆனால், சசிகலா வருகையின் தாக்கம் இப்போது அதிமுகவில் தென்பட தொடங்கிவிட்டது!

English summary
Strategies to be taken by the CM Edapadi Palanisamy with the arrival of Sasikala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X