‘நமக்கு சிப்ஸ்தான் முக்கியம்’ மாஸ்டர்பிளான் போட்ட குரங்கு.. தோள் கொடுத்த நாய்.. செம!
சென்னை: நாயின் முதுகில் ஏறி குரங்கு ஒன்று சிப்ஸ் பாக்கெட்டைத் திருட முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
குரங்கும், நாயும் நண்பர்களாக இருப்பது, மனிதர்களைப் போலவே சேட்டைகள் செய்வது போன்ற காட்சிகளை இயக்குநர் ராமநாராயணன் படங்களில் பார்த்திப்போம். அவை பயிற்சி கொடுத்து அவ்வாறு நடிக்க வைக்கப்பட்டுள்ள என்றபோதும், மக்கள் ரசிக்கும்படியாக அந்தக் காட்சிகள் இருக்கும்.
செயற்கையாக விலங்குகள் இதுபோன்று நடிக்கும் காட்சிகளே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறும்போது, நிஜமாகவே யாரும் சொல்லிக் கொடுக்காமல் விலங்குகள் செய்யும் சேட்டைக் காட்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பற்றிக் கேட்கவா வேண்டும்.
லைனில் வந்த 3 கரடிகள்.. சட்டென கோவிலுக்குள் புகுந்த அந்த நொடி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.. பரபர வீடியோ
இப்போதும் அப்படி ஒரு குரங்கு மற்றும் நாய் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

செம ஐடியா
அந்த வீடியோவில் பெட்டிக்கடை ஒன்றில் வெளியே சிப்ஸ் பாக்கெட்டுகள் கட்டித் தொங்கவிடப் பட்டுள்ளன. அவற்றை எடுப்பதற்காக குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆனால், சிப்ஸ் பாக்கெட்டுகளை அதனால் தொட முடியவில்லை. இறுதியாக அந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுக்க மாஸாக ஒரு பிளான் பண்ணுகிறது அந்தக் குரங்கு.

தோள் கொடுப்பான் தோழன்
அதன்படி அருகில் நிற்கும் நாயின் மீது ஏறி அந்த சிப்ஸ் பாக்கெட்டை அது எடுக்கப் பார்க்கிறது. ஆனால் இந்த முறையும் கைக்கு எட்டியது, அந்தக் குரங்கின் வாய்க்கு எட்டவில்லை. எவ்வளவோ முயற்சித்தும், கையில் சிப்ஸ் பாக்கெட் அகப்பட்டும் அந்தக் குரங்கால் அந்த பாக்கெட்டை சரத்திலிருந்து பிய்த்து எடுக்க இயலவில்லை.

பழைய வீடியோ
சிப்ஸ் பாக்கெட்டைப் பறிக்கும் வேகத்தில் நாயின் மீதிருந்து அந்தக் குரங்கு கீழே விழுவதோடு அந்த வீடியோ முடிகிறது. இது கடந்தாண்டு வெளியான வீடியோ என்றபோதும், தற்போது திடீரென இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நாயும், குரங்கும் சேர்ந்து செய்யும் இந்த வேடிக்கையான திருட்டை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர்.

நண்பேன்டா
சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில் உள்ள நாயும், குரங்கும் ஏற்கனவே நண்பர்கள் போலும். ஏனென்றால் தன் முதுகில் ஏறி குரங்கு சிப்ஸ் பாக்கெட்டை எடுக்க முயற்சிக்கும் போது, நாய் அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது. 'நண்பேன்டா..' என இந்த நாய் மற்றும் குரங்கின் நட்பை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.