சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசின் உறுதி ஏற்பு.. தண்ணீர் லாரி சங்க வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

Google Oneindia Tamil News

சென்னை: நாளை நடைபெற இருந்த தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளித்ததை அடுத்து போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தனியார் தண்ணீர் லாரி சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

Strike action of water truck owners withdrawn

தண்ணீர் எடுப்பதில் அதிகாரிகள் மிகவும் கெடுபிடி காட்டுவதாகவும், எடுக்க இடம் இல்லை என்பதாலும், கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு கிளம்புவதாலும் வாகனங்களை இயக்குவதை நாளை (திங்கள் கிழமை) முதல் நிறுத்துவதாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கர்நாடக அரசியல் பரபரப்பு உச்சகட்டம்.. நாளை மறுநாள் கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கூட்டம்! கர்நாடக அரசியல் பரபரப்பு உச்சகட்டம்.. நாளை மறுநாள் கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கூட்டம்!

மேலும், திருவள்ளூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் நிஜலிங்கம் குற்றம் சாட்டி இருந்தார். தண்ணீர் கிடைக்கும் இடத்தை காட்டினால், தண்ணீர் எடுத்து விநியோகம் செய்ய தயாராக இருப்பதாகவும் அவா் தொிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தனியாா் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பது பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளித்ததை அடுத்து போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

English summary
Owners of private water tanker were to be held tomorrow, the strike was withdrawn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X