சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிங் ஃப்ரம் "அஜித் பீவர்".. நேர் கொண்ட பார்வை படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. வைரலாகும் கடிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Nerkonda Paarvai Public Opinion | Nerkonda Paarvai | Ajith Kumar | Shraddha Srinath | H Vinoth

    சென்னை: அஜித் படம் பார்க்க மாணவன் ஒருவர் லீவு லட்டர் எழுதியதும், அதற்கு கல்லூரி நிர்வாகமோ வீட்டில் பெற்றோர்களை அழைத்து வர சொல்லி உள்ளதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    வயித்துவலி, பாட்டி செத்து போயிட்டாங்க.. இப்படி சீரியஸான விஷயங்களை கூட விளையாட்டாக எடுத்து லீவு லட்டர் எழுதிய காலம் இருந்தது. இல்லாத உறவுகளை கூட சித்தரித்து அந்த லீவு லட்டர்கள் பரபரத்தன. ஆனால் இப்போது காலம், தலைமுறை தலைகீழாக மாறி விட்டது.

    Student Need Leave for Nerkonda Paarvai Film

    ரத்த பந்தங்கள், சொந்தங்களையும் தாண்டி நடிகர்களுக்காக லீவு கேட்க ஆரம்பித்துவிட்டனர் மாணவர்கள். வியாழக்கிழமை அன்று அல்டிமேட் ஸ்டார் "தல" அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்துக்கு போகத்தான் நாகையில் தனியார் காலேஜ் மாணவர் ஒருவர் லீவு லட்டர் தந்துள்ளார்.

    தன்னுடைய துறை தலைவரிடம் அளித்த அந்த லீவு லட்டரில், "respected sir, ultimate star ajith kumar (NKP) அவர்கள் படத்திற்கு போக இருப்பதால் நாளை (08/08/2019) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதை பார்த்து கடுப்பான, நிர்வாகம், லீவு லட்டரை நிராகரித்ததோடு, அந்த மாணவனின் பெற்றோரை காலேஜுக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த மாணவரோ எப்படியும் முதல்நாள் ரிலீஸில் படத்தை பார்த்துவிடுவேன் என்று உறுதியாக சொல்லி இருந்தார். அவர் படத்தை பார்த்தாரோ, இல்லையோ தெரியாது, இப்போது அந்த மாணவன் எழுதிய இந்த லீவு லட்டர்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    English summary
    A College Student wrote a leave letter to watch AjithKumars Nerkonda Parvai Movie and This leave letter goes viral now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X