சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூரப்பா பதவி விலக வேண்டும்.. மாணவர் அமைப்பினர் போர்க்கொடி.. அண்ணா பல்கலை. அருகே ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா பதவி விலக வேண்டும் என்பதை, வலியுறுத்தி கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தின் அருகே மாணவர் அமைப்பு சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து உள்ளது. இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Students protest against Anna University VC surappa

அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்றது, அதன் துணைவேந்தர் மீது ஊழல் புகார் எழுந்து உள்ளது, எனவே தமிழக அரசு அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணையை குறிப்பிட்ட காலத்துக்குள் முழுமையாக நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Students protest against Anna University VC surappa

முந்தானையை காற்றில் பறக்கவிட்டு மொட்டை மாடியில் கலக்கிய ரித்விகாமுந்தானையை காற்றில் பறக்கவிட்டு மொட்டை மாடியில் கலக்கிய ரித்விகா

சூரப்பா மீது ஊழல் புகார்கள் வழங்குவதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் மக்கள் தயாராக இருப்பதாகவும், அவர்களிடம் புகார்களை விசாரணை ஆணையம் பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பங்கேற்றனர்.

காவல்துறை இந்த போராட்டத்திற்கு தடை விதித்த நிலையில் அதை மீறி போராட்டம் நடைபெற்றது.

English summary
Student organisation has held a protest against Anna University vice chancellor Surappa on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X