சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவின் வுஹானில் மூன்று மாதத்திற்கு பிறகு முதல் முறையாக பள்ளிக்கு சென்ற மாணவர்கள்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொற்றால் முதல் முதலாக பாதிக்கப்பட்ட வுஹான் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் நேற்று முன்தினம் முதல் பள்ளிக்கு சென்றனர்.

இன்று உலகின் 200 நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதல் முதலாக பரவி கண்டுபிடிக்கப்பட்ட நாடு சீனா.சீனாவின் வுஹான் நகரில் தான் முதன் முதலாக கடந்த ஜனவரி 10ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிறகு லாக்டவுன் செய்யப்பட்டது. அதாவது ஜனவரி 24ம் தேதி வுஹான் உள்ளிட்ட சீனாவின் கொரோனா பாதித்த பகுதிகளில் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

Students return to school in chinas Wuhan for first time in more than three months

வுஹானில் மட்டும் 5000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3800க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் வுஹானில் உயிரிழந்தனர். இதனால் அங்கு கடுமையான முறையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டது.சுமார் 3 மாதங்கள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்த நிலையில், ஏப்ரல் மாதம் 8ம் தேதி மீண்டும் வுகான் நகரம் திறக்கப்பட்டது.வுகானில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த சில வாரங்களாக அங்கு ஒரு கொரோனா நோயாளி கூட இருப்பதாக பதிவாகவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்நிலையில் வுஹான் நகரத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு 76 நாள்களுக்கு பின்னர் ஒரு மாதத்திற்கு முன்பு முடிவுக்கு வந்ததையடுத்து, உயர்நிலைப் பள்ளிகளுடன், சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

121 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தொழிற்கல்வி பள்ளிகளில் மாணவர்கள் புதன்கிழமை அன்று மூன்று மாதங்களுக்கு பின் முதல் முறையாக பள்ளிக்குள் சென்றார்கள். அவர்கள் இப்போது சீனாவில் நடத்தப்பட உள்ள மிகப்பெரிய கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் மது டோக்கன்.. அதிர வைத்த சேலம்.. வெறுத்து போன மக்கள்.. முதல் நாளில் அக்கப்போர்!பள்ளிக்கூடத்தில் மது டோக்கன்.. அதிர வைத்த சேலம்.. வெறுத்து போன மக்கள்.. முதல் நாளில் அக்கப்போர்!

Recommended Video

    சீனாவை நெருக்கும் உலக நாடுகள்... என்ன காரணம்?

    மாணர்கள் பள்ளியில் இருக்கும் புகைப்படங்கள், சீனாவின் பிற பகுதிகளைப் போலவே பள்ளிகள் தோற்றமளிப்பதைக் காட்டுகின்றன, மாணவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு வகுப்பிற்குச் செல்வதற்கு முன்பு வெப்பநிலை மற்றும் கிருமிநாசினி சோதனைகள் மூலம் செல்ல வேண்டியது கட்டாயம் ஆகும்.

    English summary
    Wuhan students returned to schools campus on Wednesday for the first time in more than three months.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X