சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனவில் நினைக்காத ஒன்று.. 2020ல் மாணவர்களால் மறக்க முடியாதது ஆன்லைன் கிளாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: மாணவர்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு நாள் மொத்த பள்ளிக்கூடமும் ஆன்லைனில் நடக்கும் என்று.. உண்மை தான் கொரோனாவால் இதுவரை நடக்காத ஒன்றான ஆன்லைன் கிளாஸை மாணவர்கள் பார்த்தனர்.

கொரோனாவால் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. மீண்டும் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டு தொடங்கி ஆறுமாதம் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லை கிளாஸ் முறையில் தான் வகுப்புகள் இயங்குகின்றன.

students saw an online class that has never happened before by Corona

ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசு தேர்வுகளை வைக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லை என்ற நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆன்லை கிளாஸ் படிப்படியாக ஆரம்பம் ஆனது.

அரசு பள்ளிகளும் ஒரு கட்டத்தில் ஆன்லை கிளாஸை தொடங்கின. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் குடும்பத்திற்கு கல்வி எட்டுகிறது. ஸ்மார்ட்போன் இல்லாத ஏழைகள் பாடங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது ஸ்மார்ட் போன் வைத்துள்ள நண்பர்களுடன் இணைந்து கல்வி கற்கும் நிலை தான் இப்போது உள்ளது.

Mr.எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திகங்க... உண்ணாவிரதப் போராட்ட நிறைவுரையில் ஸ்டாலின் ஆவேசம்..!Mr.எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திகங்க... உண்ணாவிரதப் போராட்ட நிறைவுரையில் ஸ்டாலின் ஆவேசம்..!

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிப்புகள் இல்லை. ஒருவேளை பொங்கல் பண்டிகை முடிந்து திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தால் அரசு அதற்கான அறிவிப்பை வெளியிடும். மாறாக கொரோனா ஒருவேளை அதிகரித்தால் ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் தொடரும் என்பது கசப்பான உண்மை.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகள் தான் ஆன்லைனில் கல்வி கற்க முடியாமல் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே ஆன்லைன் கிளாஸ் என்ற ஒன்றை முதல்முறையாக கண்டது 2020ம் ஆண்டில் தான். அந்த வகையில் மாணவர்களால் இந்த ஆண்டை மறக்கவே முடியாது.

English summary
Students would never have dreamed. One day the whole school will be online .. The truth is that the students saw an online class that has never happened before by Corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X