சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அழகிரி அதிரடி மிஸ்ஸிங்.. மதுரையை அள்ளி எடுக்கப் போவது யார்.. சத்யனா, வெங்கடேசனா!

மதுரையில் அதிமுகவுக்கு போட்டியாக சிபிஎம் கட்சி நெருக்கடி தரும் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மதுரையில் அதிரடியாக வேட்பாளரை களமிறங்கிய சிபிஎம்- வீடியோ

    சென்னை: பலத்த செல்வாக்கு உள்ள அதிமுகவுக்கும், மக்கள் ஆதரவு உள்ள சிபிஎம் கட்சிக்கும் மதுரையில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாம்!

    தென் தமிழகத்தின் முக்கியமான தொகுதி மதுரை. அழகிரி களப்பணியில் இருந்தவரை இந்த தொகுதி எப்பவுமே பரபரப்பாக இருக்கும்! இந்த முறை அது மிஸ்ஸிங்!

    அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரையோ, சிறந்த பேச்சாளர். அரசியல் அனுபவம் நிறைய உள்ளது. உள்ளது. அதிமுக சார்பாக ராஜ் சத்யன் களம் இறங்கி உள்ளார். இவரது அப்பா ராஜன் செல்லப்பா அதிமுக பிரபலம். அரசியல் பலம், பண பலம், கூடவே அமைச்சர் செல்லூர்ராஜுவின் சப்போர்ட்.. என அத்தனை பலத்தையும் வைத்துள்ளார்.

    அம்மாடியோவ்.. வேல்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி வருமான வரி ஏய்ப்பு.. ஐடி ரெய்டில் அதிரடி தகவல்அம்மாடியோவ்.. வேல்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி வருமான வரி ஏய்ப்பு.. ஐடி ரெய்டில் அதிரடி தகவல்

    தனிப்பட்ட செல்வாக்கு

    தனிப்பட்ட செல்வாக்கு

    இவருக்கு போட்டியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதே மதுரையில் சிபிஎம் 2 முறை ஜெயித்துள்ளது. அதற்கு காரணம் அன்றைய வேட்பாளர் மோகன்தான்! கட்சிக்காக பார்த்து இவருக்கு மக்கள் அன்று ஓட்டு போடவில்லை. மோகன் மீது மக்களுக்கு இருந்த பாசம்! தனிப்பட்ட மரியாதை! தனிப்பட்ட செல்வாக்கு! அவரது நன்னடத்தை! உழைப்பு! இதெல்லாம்தான் காரணம்.

    மோகன்

    மோகன்

    இப்போது சிபிஎம் வேட்பாளராக சு.வெங்கடேசனை நிறுத்தியுள்ளது. இவர் புது வேட்பாளர். ஆனால் இவர் மீதும் மோகனுக்கு பிறகு மதுரை மக்களுக்கு பாசம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. ஆழமான எழுத்துக்களால் மாவட்ட மக்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் வெங்கடேசன்.

    சரிக்கு சரி

    சரிக்கு சரி

    சமுதாய சாடல்கள் அனைத்துமே அவரது எழுத்து, மற்றும் எண்ணங்களில் பிரதிபலிப்பதே இதற்கு காரணம். அதனால் ஒரு பக்கம் எல்லா வளமும், செல்வசெழிப்பும் நிறைந்த வேட்பாளர் என்றால், இன்னொரு பக்கம் எளிமை, மக்களின் மீதுள்ள நம்பிக்கை என்று மற்றொரு வேட்பாளர். இரு வேட்பாளர்களுக்குமே எதிலுமே ஒரு பொருத்தமும் இல்லாதவர்கள். ஆனாலும் சரிக்கு சமமான டஃப் கொடுக்கிறார்கள்.

    உள்ளடி வேலை

    உள்ளடி வேலை

    இதற்கு நடுவில் 2 பிரச்சனைகள் இரு கட்சிகளுக்குமே இருக்கிறது. முதல் பிரச்சனை அதிமுகவுக்கு! செல்லூர் ராஜு ஆதரவாளர் ராஜ்சத்யன் என்பதால், அமைச்சர் உதயகுமார் கடுப்பில் உள்ளாராம். இதனால் அதிமுக வேட்பாளரை தோற்கடிக்கும் உள்ளடி வேலையில் இறங்குவார் என சொல்லப்படுகிறது.

    வெங்கடேசன்

    வெங்கடேசன்

    மற்றொரு பிரச்சனை சிபிஎம்முக்கு! அழகிரிக்கு பயந்து திமுக அங்கு நேரடியாக போட்டியிடவில்லை என்பதால் கூட்டணிக்கு ஒதுக்கி உள்ளது. இதில் அழகிரி, வெங்கடேசனுக்கு எந்த அளவுக்கு ஆதரவு தருவார்? அல்லது திமுக மேல் உள்ள கடுப்பில் வெங்கடேசனை தோற்கடிக்க ஏதாவது செய்துவிடுவாரா என்பதுதான்!

    அழகிரி என்ட்ரி

    அழகிரி என்ட்ரி

    ஆனால் "வெங்கடேசன் எனக்கு நல்ல நண்பர்.. ஆதரவு கேட்டு வந்தால் பார்க்கலாம்" என்று அழகிரி ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதுபோக, செய்தியாளர்களை சந்திக்க போவதாக சொல்லி திமுக, அதிமுக, என எல்லார் வயிற்றிலும் கிலியை ஏற்படுத்தி உள்ளார்.

    English summary
    Tough Fight between ADMK and CPM Parities in Madurai Constitutons
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X