சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் யாகம்.. ஒடிசாவில் புயல்.. சூப்பர் பவர்.. அறநிலையத்துறையை கிண்டலடிக்கும் சுப.வீ!

தமிழகத்தில் மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது குறித்து சுப. வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது குறித்து சுப. வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபனி புயல் ஒடிசா அருகே கரையை கடந்துள்ளது. இந்த புயல் ஒடிசாவில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இது மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இந்த புயல் முதலில் தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திசை மாறி ஒடிசா பக்கம் சென்றது குறிப்பிடத்தக்கது.

கடும் சேதத்தை ஏற்படுத்திய ஃபனி புயல்... 240 கி.மீ வேகத்தில் கரையை கடந்ததுகடும் சேதத்தை ஏற்படுத்திய ஃபனி புயல்... 240 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது

 யாகம் நடத்த வேண்டும்

யாகம் நடத்த வேண்டும்

இந்த புயல் சென்னையில் இருந்து விலகி சென்றதை அடுத்து, தமிழக இந்து அறநிலையத்துறை சார்பாக யாகம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர், கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

யாகம் நடந்தது

யாகம் நடந்தது

இதையடுத்து தமிழகத்தில் பல கோவில்களில் யாகம் நடத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறையின் இந்த செயலுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர். சிலர் என்ன இவர்கள் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

சுப. வீரபாண்டியன் கருத்து

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் யாகம் வளர்த்தால், ஒடிசாவில் புயல் அடிக்கிறது. மிகவும் வலிமையான யாகம் போலிருக்கிறது, என்று கிண்டலாக டிவிட் செய்துள்ளார்.

வைரலானது

வைரலானது

இந்த டிவிட் தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இந்த டிவிட்டை எதிர்த்து சிலர் பதில் அளித்து வருகிறார்கள். சுப.வீ இப்படி பேச கூடாது என்று அவர்கள் டிவிட் செய்து வருகிறார்கள். அதே சமயம் இதை ஆதரித்தும் சுப. வீக்கு ஆதரவாக சிலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

English summary
Suba Veerapandian mocks Hindu endowments decision to do a Pooja seeking rain in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X