சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் பேனர் விபத்தால் பலியான சுபஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Chennai Girl Subashree lost her life due to illegal Banners

    சென்னை: சென்னையில் பேனர் விபத்தால் பலியான சுபஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னையில் பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ பைக் விபத்தில் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த மரணத்தை ஒரு விபத்து என்று கூறி புறந்தள்ளிவிட முடியாது. அரசின் அலட்சியம், நிர்வாகிகள் அலட்சியம், மெத்தனப்போக்கு எல்லாம்தான் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணம் ஆகும்.

    பள்ளிக்கரணையில் இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார்.

    சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை!சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை!

    சீல் வைத்தனர்

    சீல் வைத்தனர்

    இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்து இருக்கிறது. ஆனால் சுபஸ்ரீ வழக்கில் இன்னும் சரியான பாதையில் விசாரணை நகரவில்லை. இந்த வழக்கில் முதலில் கட் அவுட் வைத்த கடை சீல் வைக்கப்பட்டது.

    லாரி ஓட்டுநர்

    லாரி ஓட்டுநர்

    அதன்பின் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்கு பிறகுதான் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது இன்று எப்ஐஆர் பதியப்பட்டது. அதுவும் கூட சென்னை ஹைகோர்ட் கண்டித்ததை அடுத்து பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதியப்பட்டது.

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலை 11 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    போலீஸ் அவரை கைது செய்ய வாய்ப்புள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி ஜெயகோபால் முன் ஜாமீன் வாங்க திட்டமிடுகிறார் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Subhasri Banner Death: AIADMK Jeyagobal admitted in hospital due to chest pain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X