சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்த்துறது இருக்கட்டும்.. சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியுமா.. ஹெச் ராஜாவை கிழிக்கும் நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா யாருன்னு தெரியாமல் வ வே சு ஐயர் புகைப்படத்தை போட்டு ஹெச் ராஜா தவறாக நினைவு தின வாழ்த்து சொல்லியிருப்பதால் அவரை இணையதளவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து பாரத அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடிய மாபெரும் வீரர் சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 -23 சூலை 25 1925) அவர்கள்.

subramania siva memorial day, h raja wrongly posted va ve su iyer image

விடுதலை போராட்ட வீரர்கள் வ.உ. சிதம்பரனாருடனும், மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச் செய்த சிறந்தமேடைப் பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர். 1913ல் ஞானபாநு இதழை நடத்தியவர். தியாகங்களை போற்றி நினைவு கூறுவோம் என தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவிற்கு கீழ் சுப்பிரமணிய சிவாவுக்கு பதில் வவேசு ஐயர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், வாழ்த்தெல்லாம் சரிதான். இவர் தான் சுப்பிரமணியன் சிவா என்று உங்களுக்கு யார் சொன்னது என கிண்டல் செய்து விமர்சித்து வருகிறாரகள்.

subramania siva memorial day, h raja wrongly posted va ve su iyer image

கூகுளில் சுப்பிரமணிய சிவா என அடித்தால் வவேசு ஐயர் புகைப்படத்தை சிலர் தவறாக போட்டுள்ளார்கள். அதை பார்த்து தான் ஹெச் ராஜா இப்படி ஒரு தவறான பதிவினை போட்டிருப்பார் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள். இதில் என்ன ஒரு கொடுமை என்றால் விக்கிப்பீடியாவில் சுப்பிரமணிய சிவா படத்துக்கு பதில் வவேசு ஐயர் புகைப்படத்தை தான் போட்டு வைத்துள்ளார்கள்.

English summary
subramania siva memorial day, h raja wrongly posted va ve su iyer image. Subramaniya Siva was an Indian writer and activist during the Indian independence movement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X