சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்?

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு தற்போது காலம் கணிந்து வந்து உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : BJP leader Subramanian Swamy may use the worst moment in the Finance Sector

    சென்னை: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு தற்போது காலம் கணிந்து வந்து உள்ளது. அவரின் அரசியல் கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

    கிட்டத்தட்ட இது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் 10 வருட கனவு என்று கூட கூறலாம். அந்த கனவிற்கு மிக மிக நெருக்கமாக தற்போது சுப்பிரமணியன் சாமி இருக்கிறார்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தவர் சுப்பிரமணியன் சாமி. அதன்பின் பாஜக ஆட்சியிலும் தொடர்ந்து அவர் விமர்சனங்களை வைத்து வந்தார்.

    தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..!தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..!

    நிதி அமைச்சர்

    நிதி அமைச்சர்

    பாஜக கட்சியில் தன்னுடைய கட்சியை இணைத்துவிட்டு, அவர் தீவிர அரசியலில் இறங்கிய போதே எல்லோரும் சுப்பிரமணியன் சாமிதான் அடுத்த நிதி அமைச்சர் என்று கூறினார்கள். ஆனால் அப்போது நிதி அமைச்சர் பதவி அருண் ஜேட்லிக்கு வழங்கப்பட்டது. அதேபோல் அமைச்சரவையில் சுப்பிரமணியன் சாமிக்கும் எந்த விதமான பதவியும் வழங்கப்படவில்லை.

    என்ன உறுதி

    என்ன உறுதி

    பெற்றால் கண்டிப்பாக நிதி அமைச்சர் பதவிதான் என்பதில் சுப்பிரமணியன் சாமி உறுதியாக இருந்தார். ஆனால் இந்த இரண்டாவது ஆட்சியிலும் நிதி அமைச்சர் பதவி அவருக்கு வழங்ப்படவில்லை. அவர் அடிக்கடி எதிர்த்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு அந்த பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதையும் தற்போது சுப்பிரமணியன் சாமி கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளார்.

    எப்படி எதிர்ப்பு

    எப்படி எதிர்ப்பு

    அருண் ஜேட்லியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை விட அதிகமாக எதிர்த்தது சுப்பிரமணியன் சாமிதான். இது பாஜக கட்சிக்கு உள்ளேயே பெரிய குழப்பங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவுமே தெரியாது என்று சுப்பிரமணியன் சாமி பேச தொடங்கி உள்ளார். இதற்கு பின் பல திட்டங்கள் உள்ளது என்று கூறுகிறார்கள்.

    இல்லை

    இல்லை

    சுப்பிரமணியன் சாமிக்கு இது கொஞ்சம் சாதகமான சூழ்நிலை என்று கூறலாம். தன்னுடைய பரம வைரியான ப. சிதம்பரம் தற்போது சிபிஐ காவலில் உள்ளார். அருண் ஜேட்லி இயற்கை எய்திவிட்டார். நிர்மலா சீதாராமனின் அமைச்சரவை பொருளாதார சீர்கேட்டை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கடுமையாக திணறி வருகிறது. தினம் தினம் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது.

    என்ன வாய்ப்பை

    என்ன வாய்ப்பை

    இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நிதி அமைச்சர் பொறுப்பை பெறலாம் என்று சுப்பிரமணியன் சாமி நினைக்கிறார். நிர்மலா சீதாராமனுக்கு எதிராக இவர் ஏற்கனவே காய்களை நகர்த்தி வருகிறார் என்று கூறுகிறார்கள். நிதி அமைச்சர் பதவி வேண்டும் என்று அவர் தூது அனுப்ப தொடங்கிவிட்டார் .

    ஆர்பிஐ எப்படி

    ஆர்பிஐ எப்படி

    அதேபோல் ஆர்பிஐயில் இவருக்கு நெருக்கமான நபர்கள் சிலர் இருப்பதால், தான் நிதி அமைச்சர் ஆனால் கண்டிப்பாக ஆர்பிஐ ஆதரவு கிடைக்கும் என்றும் இவர் கருதுகிறார். ஆர்பிஐ தன்னுடைய பேச்சை எல்லாம் கேட்கும். இது தனக்கு சாதகமாக இருக்கும் என்று சாமி கருதுகிறார் .

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    தற்போது தமிழக பாஜக தலைமைக்கு யார் பொறுப்பேற்க போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்மலா சீதாராமனின் பெயரும் இதில் அடிப்பட்டு வருகிறது. அவரின் சமீபத்திய சென்னை விசிட்டும் இது தொடார்பாக பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அதனால் நிர்மலா சீதாராமன் மாநில அரசியலுக்கு செல்ல கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இதை சுப்பிரமணியன் சாமி பயன்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். சாமியின் பொருளாதாரம் சார்ந்த திட்டங்கள், கொள்கைகள் எல்லாம் நிர்மலா சீதாராமனின் கொள்கைகளுக்கு எதிரானது. அப்படியே நேர்மாறானது. இதனால் சுப்பிரமணியன் சாமி நிதி அமைச்சராக வந்தால் இந்திய பொருளாதாரத்தில் என்னவிதமான மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP leader Subramanian Swamy may use the worst moment in the Finance Sector for his dream.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X