சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக தனித்து செயல்பட வேண்டும்.. வழக்கம் போல் பாஜகவுக்கு எதிராக பேசும் சுப்பிரமணியன் சுவாமி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அதிமுக தனித்து செயல்படும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

வடமாநிலங்களில் பாஜக ஜொலிக்கும் போதிலும் தென்னிந்தியாவில் அக்கட்சியால் சோபிக்க முடியவில்லை. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் இணைந்து தமிழகத்தில் போட்டியிட்டது.

Subramanian Swamy says ADMK should act separately

எனினும் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வியையே கண்டது. அது போல் அதிமுகவும் போட்டியிட்ட 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைத்ததால் மட்டுமே அதிமுக தோல்வி அடைந்தது.

சீமான் தடாலடி கருத்து.. ஸ்டாலினுடன் சந்திப்பு.. ரூட்டை க்ளியர் செய்த விஜய்சீமான் தடாலடி கருத்து.. ஸ்டாலினுடன் சந்திப்பு.. ரூட்டை க்ளியர் செய்த விஜய்

இந்த நிலையில் இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் இந்துத்துவாவை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டும்.

இந்து தீவிரவாதம் வளர்ந்து வருகிறது என கூறிய ப. சிதம்பரத்திற்கு தக்க பதில் கிடைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிலையில் அதிமுக தனித்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் பாஜக வேட்பாளர் போட்டியிட்ட போதிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக தனித்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Subramanian Swamy says that ADMK should act independently as it is an ally of BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X