சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரியார் விஷயத்தில் நான் ரஜினி பக்கம்.. நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் உதவுவேன்.. சு.சாமி கிண்டல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: பெரியார் குறித்த நிலைப்பாட்டில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தால் அவருக்கு நீதிமன்றத்தில் நான் உதவுவேன் என சுப்பிரமணியன் சுவாமி போகிற போக்கில் கிண்டல் செய்தார்.

    பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென யார் பக்கம் பேசுவார், யாரை எதிர்ப்பார் என கணிப்பது சற்று கடினம். அந்த வகையில் எப்போதும் ரஜினிகாந்தை அவதூறு பேசி வரும் சுப்பிரமணியன் சுவாமி தற்போது பெரியார் விவகாரத்தில் அவரது பக்கம் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    1971 இல் சேலத்தில் பெரியார் நடத்திய பேரணியில் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகவும் செருப்பு மாலை அணிவித்தும் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதை அப்போது எந்த பத்திரிகையும் துணிவோடு போடாத நிலையில் துக்ளக் சோ தனது பத்திரிகையில் அட்டைப்படமாக வெளியிட்டார் என ரஜினி துக்ளக் விழாவில் பேசினார்.

    ரஜினி கட்சி ஆரம்பிக்க ரெடி ஆகிட்டாரு.. உஷாரு.. தேசிய அளவில் வைரலான #மன்னிப்பு_கேட்க_முடியாது!ரஜினி கட்சி ஆரம்பிக்க ரெடி ஆகிட்டாரு.. உஷாரு.. தேசிய அளவில் வைரலான #மன்னிப்பு_கேட்க_முடியாது!

    பேரணி

    பேரணி

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டு செல்லப்படவில்லை என்றும் செருப்பு மாலை அணிவிக்கப்படவில்லை என்றும் பெரியார் பேரணியில் இடம்பெற்றிருந்தவர்கள் கூறுகின்றனர்.

    மன்னிப்பு

    மன்னிப்பு

    எனவே ரஜினிகாந்த் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆனால் ரஜினியோ தான் கூறியது உண்மை, தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்றார். ரஜினி நிச்சயம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என திராவிடர் கழகத்தினர் கூறுகின்றனர்.

    ரஜினிக்கு ஆதரவு

    இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரு மாற்றத்திற்காக பெரியார் பேரணி குறித்து ரஜினி பேசிய விவகாரத்தில் நான் அவரது பக்கம் இருக்கிறேன். இது உண்மைதான். இதை சோ தனது துக்ளக் இதழில் பதிவு செய்திருந்தார். ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அவர் விரும்பினால் நீதிமன்றத்தில் அவரை ஆதரிப்பேன் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

    போயஸ் கார்டன் பேட்டி

    போயஸ் கார்டன் பேட்டி

    ரஜினி எப்போதும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என்பதை அண்மைச் சம்பவங்கள் காட்டுகின்றன. ஆம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கமல் பிறந்த நாள் விழாவில் இயக்குநர் பாலச்சந்தரின் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தேவையற்றது

    தேவையற்றது

    அப்போது அவர் கூறுகையில் திருவள்ளுவரை போல எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறது. திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன். மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளபோது திருவள்ளுவர் காவி குறித்த விவாதம் தேவையற்றது என்றார்.

    ரஜினியை கிண்டல் செய்த சு சாமி

    ரஜினியை கிண்டல் செய்த சு சாமி

    சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினி செய்தியாளர்களை மீண்டும் சந்தித்தார். அப்போது திருவள்ளுவர் ஒரு ஆத்திகர். நாத்திகர் கிடையாது. அதை யாரும் மறுக்க முடியாது. பாஜக அலுவலகத்தில் அவர்களுடைய ட்விட்டரில் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசியுள்ளனர். அது அவர்களின் தனிப்பட்ட விவகாரம். காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன என்றார். சில மணிநேரங்களில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதால் சுப்பிரமணியன் சுவாமி உதவுவதாக கூறிவிட்டு போகிற போக்கில் ரஜினியை கிண்டல் செய்துள்ளார்.

    English summary
    BJP Rajyasabha MP Subramanian Swamy says that If Rajini stays firm he will back Rajini in court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X