சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 2 முடிவுகளால்தான் 30 வருஷமா தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது... சாமி சொல்கிறார்!

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசுகளின் முடிவுகளால் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது: சுப்பிரமணியன் சுவாமி- வீடியோ

    சென்னை: மத்திய அரசுகளின் 2 முக்கிய முடிவுகளால்தான் தமிழ்நாடு 30 ஆன்டுகளாக அமைதியாக இருக்கிறது என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.

    இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை மீண்டும் அதிபராக்க வேண்டும் என்கிற கருத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. ராஜபக்சேவை டெல்லிக்கு அழைத்து கருத்தரங்கும் நடத்தினார் சுப்பிரமணியன் சுவாமி.

    Subramanian Sway tweets on Two major Govt decisions

    அண்மையில் ஈஸ்டர் நாளில் இலங்கையை உருக்குலைத்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட சுப்பிரமணியன் சுவாமி, ராஜபக்சேவை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையானது.

    பின்னர் தவ்ஹீத் ஜமா அத் அமைப்புக்கும் இலங்கை குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு என கூறப்பட்டது. உடனடியாக தமிழக தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினரை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி சந்தித்த பழைய செய்தி கட்டுரைக்கான லிங் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.

    உளவுத்துறை தகவலை அவர்கள் மறைத்துவிட்டார்கள்.. உண்மை விரைவில் வெளிவரும்.. இலங்கை அமைச்சர் பரபரப்பு! உளவுத்துறை தகவலை அவர்கள் மறைத்துவிட்டார்கள்.. உண்மை விரைவில் வெளிவரும்.. இலங்கை அமைச்சர் பரபரப்பு!

    இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு முக்கிய முடிவுகளால்தான் தமிழகம் 30 ஆண்டுகளாக அமைதியாக இருந்து வருகிறது. அதில் ஒன்று, சந்திரசேகர் ஆட்சியில் திமுக ஆட்சியை கலைக்க முடிவு செய்தது; அதை நான் நிறைவேற்றியது. அடுத்தது 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஒழிக்க ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் ஆதரவு தந்தது என பகிர்ந்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

    ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து விவாதப் பொருளாகி உள்ளது.

    English summary
    BJP Rajya Sabha MP Subramanian Swamy tweets in his page "Two major Govt decisions had secured a peaceful TN for three decades: First is the decision of the Chandrashekhar Govt to dismiss the DMK Govt and executed by me in January 1991. Second is Man Mohan Singh giving support to Rajapaksa todecimate LTTE in 2009".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X