சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி

கமல், முக ஸ்டாலினை சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    kamalhassan video about hindi imposition

    சென்னை: கமலும் ஸ்டாலினும் ஏன் இப்படி ஊளையிட்டு கொண்டிருக்கிறார்கள் என்று இந்தி எதிர்ப்பு குறித்து சுப்பிரமணிய சுவாமி பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸை லெப்ட் & ரைண்ட் வாங்கி வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி. சில சமயம், பாஜகவில் இருப்பவர்களையே வறுத்தெடுத்து விடுவார் சு.சாமி.

    ஆனாலும் இவரை எப்போதுமே பாஜக கோபித்து கொள்ளாது. இதற்கு காரணம், காங்கிரஸ் தலைவர்களை பலரை கேஸ் போட்டு சிக்கலில் மாட்டி வைத்தவர், மாட்டி வைப்பவர். இது இப்போதுவரை பாஜகவுக்கு ஒரு பெரிய பிளஸ்ஸாக இருப்பதால்தான்!

    அமித்ஷா

    அமித்ஷா

    அதேபோல, சுப்பிரமணிய சாமி ஒரு ட்வீட் போட்டாலே, அது சர்ச்சையாக வெடித்து சிதறும் என்பதையும் பாஜக தலைமை நன்றாகவே புரிந்து வைத்து கொண்டுள்ளது. இப்போது நாட்டில் அமித்ஷா சொன்ன ஒரே தேசம், ஒரே மொழி கருத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    படேல் கனவு

    படேல் கனவு

    "நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும், ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும்" என்று அமித்ஷா ஒரு பொறியை பற்ற வைத்தார்.

    பதிலடி

    பதிலடி

    இதற்கு பல தரப்பு தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். முதன்முதலில் அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்தது திமுக தலைவர் ஸ்டாலின்தான். இது இந்தியா, 'இந்தி'யா அல்ல என்றும், இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் மிக காட்டமாக கூறியிருந்தார். ஸ்டாலின் இப்படி கருத்து சொல்லி 2 நாள் ஆகியும், இதற்கு சு.சாமி எந்த கருத்து, பதிலடியை தரவே இல்லை.

    கடுப்பு ட்வீட்

    ஆனால் இன்று மதியம் கமல் பதிவிட்ட வீடியோ, செம கடுப்பினை சு.சாமிக்கு தந்துவிட்டது போல தெரிகிறது. "நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது" என்று நேரடியாக வீடியோவில் தோன்றி கமல் சாடியிருந்தார். இதை பார்த்தாலோ, என்னவோ, கடுப்பாகிவிட்ட சு.சாமி உடனடியாக வந்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    கயவன் கமல்

    கயவன் கமல்

    அதில், "கயவன் கமலும் திமுக தலைவர் ஸ்டாலினும் இந்தி திணிப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தி கற்பிக்க கூடாது என்று அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது? முதலில் இந்தியை 3-வது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் கொடுக்கலாம். எதைத் தேர்வு செய்து கொள்வது என்பது மாணவர்களின் முடிவாக இருக்கட்டும்" என்று சு.சாமி பதிவிட்டுள்ளார்.

    English summary
    BJP Senior Leader Subramaniyan Swamy tweet about Hindi Impose and slams DMK Leader MK Stalin and MNM Leader Kamalhasan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X