• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தங்கர் பச்சான் போட்ட போடு.. "வாழ்க மக்களின் அரசியல் அறிவு".. வஞ்சபுகழ்ச்சி ட்வீட்.. யாரை சொல்கிறார்?

Google Oneindia Tamil News

சென்னை: "அனைத்து தேர்தல்களிலும் அரசியலை தொண்டாக எண்ணி மக்களுக்காகவே பாடுபடுபவர்களை தேர்ந்தெடுப்பது போன்றே நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தகுதியான வேட்பாளர்களை மட்டுமே மக்கள் தேர்ந்தெடுள்ளார்கள்! வாழ்க மக்களின் அரசியல் அறிவு! வாழ்க தமிழ்நாடு!வாழ்க மக்களாட்சி!" என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தங்கர்பச்சான் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தங்கர்பச்சான்.. சில காலம் அரசியல் பேசாமல் ஒதுங்கிவந்த நிலையில், சமீப காலமாகவே திமுகவை விமர்சித்து வருகிறார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குறுதிகளை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தபோது, அதை விமர்சித்தவர்களில் முதன்மையானவர் தங்கர்பச்சான்தான்..

 திமுக வசமான எடப்பாடி நகராட்சி... சொந்த தொகுதியில் இபிஎஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம் திமுக வசமான எடப்பாடி நகராட்சி... சொந்த தொகுதியில் இபிஎஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம்

 திமுக

திமுக

"எப்படியாவது வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இன்றைய அரசியல்வாதிகள் பேசும் பேச்சுக்களை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக ஆ. ராசா, வீசியுள்ள பழிச்சொல்லை திமுகவில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. இப்படியே போனால் பகுத்தறிவுப் பாசறையில் பாடம் பயின்றதாக கூறிக்கொண்டு பெருந்தலைவர்களின் படங்களை இனி பயன்படுத்துவதில் எவ்வித நியாயமும் இருக்காது என்று ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார்.

தங்கர்பச்சான்

தங்கர்பச்சான்

இதற்கு பிறகு, திமுக ஆட்சி அமைந்த பிறகு ஒரு நாளிதழுக்கு தங்கர் பச்சான் பேட்டி தந்திருந்தார்.. அதில் திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு தங்கர்பச்சான், "முதல்வர் நேர்மையான அதிகாரிகளை நியமித்திருக்கிறார். ஆனால், அவர்களை மட்டுமே வைத்து நல்லாட்சியைத் தந்துவிட முடியாது. ஸ்டாலின் எதையாவது மக்களுக்குச் செய்ய வேண்டும்.. ஒரு மனிதன், அவன் வாழ்நாளில் அதிகம் செலவிடுவது கல்விக்கும் மருத்துவத்துக்கும்தான்... ஆனாலும் ஏன் எல்லோரும் தனியாரையே அதிகம் நாடுகிறார்கள்? எந்த அரசியல்வாதி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கிறார்?

ஜெயலலிதா

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கு எத்தனையோ திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், அவர் உயிர் பிழைக்கத் தனியார் மருத்துவமனைக்குத்தானே சென்றார்? ஏராளமான மருத்துவத் திட்டங்களைக் கொண்டுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏன் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்?"என்ற கேள்விகளை அடுக்கினார்.

 செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

அவ்வளவுஏன், செந்தில்பாலாஜியிடம் மின்சார கட்டணம் குறித்த புகார்கள் தெரிவித்த நபர்களில் தங்கர் பச்சானும் ஒருவர்.. "மாசா மாசம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்... ஆனால், 36 ஆயிரம் ரூபாய் பில் கட்டியிருக்கேன்.. மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என்று முதல்வர் சொல்லியிருந்தாரே, அதை நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கையும் விடுத்திருந்தார்.

 மக்களிடம் சென்று நடி

மக்களிடம் சென்று நடி

இப்படி அரசியலையும் அரசியல்வாதிகளையும் தொடர்ந்து விமர்சித்தும் கேள்வி எழுப்பியும் வரும் தங்கர்பச்சான், கடந்த 19-ம் தேதி ஒரு போட்டோவை ட்வீட்டில் ஷேர் செய்திருந்தார்.. ஒருவர் வாய் திறந்து பேச முடியாதபடி, பணம் அவர் வாயை அடைத்துவிடுவது போல அந்த போட்டோ இருந்தது.

 வியாபாரமாக்கு

வியாபாரமாக்கு

மக்களிடம் சென்று நடி.. மக்களின் பணத்தை கொள்ளை அடி! அடித்ததில் ஒரு பருக்கையை மக்களிடமே கொடு! மக்களை சிந்திக்க விடாமல் குடிகாரர்களாக ஆக்கு! அப்படியே மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கு! மீண்டும் ஆட்சியைப்பிடி! அரசியலை வியாபாரமாக்கு! மக்களாட்சியை கொன்று முடி! இதுதான் நவீன அரசியல்வாதி என்று குறிப்பிட்டு, நிகழ் கால அரசியலை இதை விட எளிமையாகவும்,சுருக்கமாகவும் விளக்க முடியாது.. தேர்தல் நாடகத்தை தோலுரிக்கும் இப்படத்தை பதிவு செய்தவருக்கு நன்றி என்று சொல்லி இந்த படத்தை பதிவிட்டிருந்தார்.

 திமுக வெற்றி

திமுக வெற்றி

இன்றைய தினம் நகர்ப்புற தேர்தல் வெளிவந்து கொண்டிருக்கையில் திமுகவின் கையே தற்போது வரை ஓங்கி உள்ளது.. தற்போது மீண்டும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் தங்கர் பச்சான்.. அரசியல் என்பது ஒரு தொழிலாக மாறிவிட்ட இக்காலத்தில் மக்களுக்கானத் தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து திடீரென எங்கிருந்தோ குதிக்கபோவதில்லை. இருப்பதிலேயே தரமானவர்கள் யார் என்பதை நாம்தான் அடையாளம் கண்டு அவர்களிடத்திலுள்ள குறைகளை நீக்கி வளர்த்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 வாழ்க மக்களின் அரசியல் அறிவு

வாழ்க மக்களின் அரசியல் அறிவு

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்து, அனைத்து தேர்தல்களிலும் அரசியலை தொண்டாக எண்ணி மக்களுக்காகவே பாடுபடுபவர்களை தேர்ந்தெடுப்பது போன்றே நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தகுதியான வேட்பாளர்களை மட்டுமே மக்கள் தேர்ந்தெடுள்ளார்கள்! வாழ்க மக்களின் அரசியல் அறிவு! வாழ்க தமிழ்நாடு!வாழ்க மக்களாட்சி!!" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பெரும்பாலானோர் திரண்டு, "ஒன்றும் சொல்வதற்கில்லை ஐயா, பணம் படுத்தும் பாடு, உங்கள் ஆதங்கம் புரிகிறது" என்று பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Success of DMK: Long live the political knowledge of the people, says Director Thangar Bachan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X