முதலமைச்சர் நடத்திய திடீர் ஆய்வு! வியர்த்து விறுவிறுத்துப் போனஅதிகாரிகள்! 20 நிமிடம் பரபரப்பு!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தியது அதிகாரிகளை வியர்த்து விறுவிறுக்க வைத்தது.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்கள் பெற வந்துள்ள சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பொதுமக்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய சேவைகளை விரைவாக வழங்கிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வெயிலுக்கு இதமாய் இளநீர் கொடுத்த பெண்.. ’ரொம்ப நன்றிங்கம்மா’..! ருசித்து குடித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி ஆய்வு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த் துறையின் சேவைகளைப் பெற வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின்
கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்களை அழைத்து
இ-சேவை மையத்திற்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களின்கோரிக்கைகள் எவ்வளவு நாட்களில் தீர்க்கப்படுகிறது போன்ற விவரங்கள் குறித்துஅங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், வட்டாட்சியர் அலுவலக
வருகைப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர், சேவைகள்
பெற வந்திருந்த பொதுமக்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் பெற வந்துள்ள
சேவைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

20 நிமிடங்கள்
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கக் கூடாது என்றும், அவர்களுக்குஉரிய சேவைகளை விரைவாக வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முதலமைச்சரின் தனிப் பிரிவிலிருந்து வந்துள்ள மனுக்கள் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதிகாரிகளுக்கு அறிவுரை
அரசின் முக்கியமான துறையாக விளங்கும் இதன் சேவை, மக்களுக்கு மிகவும் இன்றியமையாதது. எனவே, பொதுமக்கள் குறிப்பாக மாணவர்களின் கல்விக்குத்தேவையான சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பிற அரசு சேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் எந்தவிதத் தொய்வுமின்றி வழங்கிட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.