சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரிசி கார்டு வைத்திருந்தால் ரூ.1000.. சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்ற இன்றே கடைசி நாள்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாளாகும். www.tnpds.gov.in என்ற இணையதள முகவரி வழியாக செல்போன் மூலமே இருந்த இடத்தில் இருந்தபடி எளிதாக மாற்றலாம்.

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. பொருளில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என மூன்றுவிதமான கார்டுகள் உள்ளன.

இதில் பெரும்பாலான மக்கள் அரிசி அட்டையாக வைத்துள்ளார்கள். இன்னும் சிலரது கார்டுகள் சர்க்கரை அட்டையாகவே உள்ளது. சிலர் வெளியூரிலோ அல்லது வெளிமாநிலத்திலோ சில காலம் வசிக்க நேர்ந்தாலோ அல்லது பொருள்கள் வாங்க விரும்பவில்லை என்றாலோ அவர்கள் தங்கள் அட்டையை பொருள் இல்லா அட்டையாக மாற்றி வைத்திருப்பார்கள்.

 கோரிக்கை

கோரிக்கை

இந்நிலையில் சர்க்கரை அட்டை வைத்துள்ள பலர் தங்கள் குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று தமிழக அரசு சர்க்கரை அட்டை வைத்துள்ளவர் அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என 26ம் தேதி வரை காலக்கெடு விதித்து.

 இன்றே கடைசி

இன்றே கடைசி

அதன்பிறகும் மாற்றாத மக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் மூன்று நாட்களுக்கு அதாவது 29ம் தேதி வரை (இன்று வரை0 காலஅவகாசத்தை நீட்டி தமிழக அரசு உத்தரவிட்டது. எனவே இன்றுடன்(வெள்ளிக்கிழமை) சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் முடிகிறது.

 நேரடியாக வழங்கலாம்

நேரடியாக வழங்கலாம்

தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் இருந்தன. இவர்கள் சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைகளில் அரிசி கார்டாக மாற்றக்கோரி விண்ணப்பங்களை இன்றைக்கள் நேரடியாக வழங்கலாம் என்று அரசு அறிவித்துஇருந்தது.

 குடும்ப அட்டை

குடும்ப அட்டை

இதேபோல் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர்களிடமும், குடும்ப அட்டை நகலை இணைத்து விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது.

 இன்றுடன் கடைசி

இன்றுடன் கடைசி

அதன்படி, www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் உங்கள் செல்போன் மூலமும் சர்க்கரை கார்டை அரிசி கார்டாக எளிதாக மாற்ற முடியும் எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம்.

 மக்கள் ஆர்வம்

மக்கள் ஆர்வம்

இந்த ஆண்டு அரிசி கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். எனவே, சர்க்கரை கார்டு வைத்துள்ள பலர் அரிசி கார்டாக மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

English summary
today last day, Sugar ration card holders can be converted into rice ration cards today only
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X