சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஜித் மரணம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்திய லதா ரஜினிகாந்த்.. எடுத்த அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Sujith rescue operation | எல்லாமே முடிஞ்சு போச்சு.. சுஜித்தின் தாயார் உருக்கம்!

    சென்னை: சுஜித் மரணம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்றும் இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு என்றும் ரஜினி காந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தனது தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். முதலில் 25 அடியில் தவறி விழுந்த குழந்தை, அடுத்ததாக 70 அடிக்கு சென்றுவிட்டான். அதன் பிறகு மீட்பு முயற்சியின் போது 80 அடிக்கு கீழ் சென்றுவிட்டான்.

    சுபஸ்ரீ வழக்கிலும், சுஜித் வழக்கிலும் உயிர் பலிக்கு பிறகுதான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா?.. நீதிபதிசுபஸ்ரீ வழக்கிலும், சுஜித் வழக்கிலும் உயிர் பலிக்கு பிறகுதான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா?.. நீதிபதி

     சுஜித் மரணம்

    சுஜித் மரணம்

    குழந்தை சுஜித்தை மீட்க கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்தது. ஆனால் இறுதியில் குழந்தையை சடலமாகவே மீட்க முடிந்தது. சுஜித்தின் மரணம் பலருக்கும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் சோகத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

     ரஜினி கேட்டார்

    ரஜினி கேட்டார்

    இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில். சுஜித்தின் நிலை குறித்து ரஜினிகாந்த என்னிடம் கேட்டபடி இருந்தார். சுஜித் மீண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. சுஜித் மரணம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு.

    பெற்றோர்களே

    பெற்றோர்களே

    எது நடக்கக் கூடாது என அனைவரும் நினைத்து இருந்தோமோ.. அது நடந்து விட்டது. சாதி, மதம் பார்க்காமல் நம் அனைவரையும் குழந்தை சுஜித் ஒன்றிணைத்தான்.
    குழந்தைகளுக்கு பெற்றோர் தான் பாதுகாப்பு, அவர்கள் நம்மை நம்பி தான் உள்ளார்கள். பாதுகாப்பின்றி குழந்தைகள் விளையாட பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.

    வாருங்கள்

    வாருங்கள்

    குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரமும் செயல்படும் குழுவை நாங்கள் அமைக்க போகிறோம். குழந்தைகள் நலத்திற்காக பணியாற்ற முன்வர வேண்டும்" இவ்வாறு லதா ரஜினி காந்த் கூறினார்.

    English summary
    latha rajinikanth worry about sujith died on borewell, she said, Sujith's death cannot be described in words
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X