சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது: ரஜினி காந்த் இரங்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    RIP Sujith | சிதிலமடைந்து மீட்கப்பட்ட உடல்.. சுஜித் பிரேத பரிசோதனை சொல்வது என்ன?-வீடியோ

    சென்னை: சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என நடிகர் ரஜினி காந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித்.

    Sujiths death is heartbreaking: RajiniKanth condolences

    கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

    சுஜித் மரணம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்திய லதா ரஜினிகாந்த.. எடுத்த அதிரடி முடிவுசுஜித் மரணம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்திய லதா ரஜினிகாந்த.. எடுத்த அதிரடி முடிவு

    அவனை மீட்க கடந்த ஐந்து நாட்களாக நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு உடலைத்தான் மீட்பு படையினரால் மீட்க முடிந்தது.

    சுஜித்தின் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் பலரும் சோகத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். திரையுலக பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் சுஜித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    நடிகர் ரஜினி காந்த் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜித்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Sujith's death is heartbreaking, My deepest condolences to the parents of Sujit : Rajini Kanth condolences
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X