சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடியலண்ணே.. முடியலை.. அடிக்கிற வெயிலைப் பார்த்தா தமிழ்நாடு தனியா சுத்துது போல #வெயில்

Google Oneindia Tamil News

சென்னை: எங்கு பார்த்தாலும் வெயில்.. வெள்ளை வெளேர் என கண்ணைப் பறித்துக் கொண்டு.. வீட்டுக்குள்ளும் இருக்க முடியலை.. வெளியிலும் நடமாட முடியலை.. அவிகிறது உடம்பெங்கும்.

மார்ச் மாத நடுவிலிருந்தே வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது. இன்னும் மே மாதம் வரை நாம் எப்படி ஓட்டப் போகிறோம் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு இப்போதே வெயில் உச்சத்தில் உலவிக் கொண்டுள்ளது.

வெயிலிலிருந்து தப்புவது எப்படி என்பது முதல் வெயிலை வைத்து செய்வது எப்படி என்பது வரை சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துப் பரிமாற்ற வியர்வையில் குளித்துக் கொண்டுள்ளனர். அதிலிருந்து சில முத்துக்கள்...

"ஆன்டி இந்தியன்" சொல்லை கேட்டு டிவியை உடைத்த கமல் ஹாசனுக்கு ஒரு திறந்த மடல்

திருச்சியில் திருகு வெயில்

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் திருச்சில எறக்குது சூரியன்

தண்ணி இருக்கு.. ஆனா சூடா இருக்கே

சென்னை சேமியர்ஸ் சாலையில் ஒரு நல்ல ஆத்மா வைத்துள்ள தண்ணீர் கேன். ஆனால் தண்ணீர்தான் சூடாக இருக்கிறது.

கருகிப் போச்சேய்யா

வெயிலில் அலைந்து திரியும் பலருக்கும் முகம் இப்படித்தான்.. ஆதார் கார்டு போட்டோவை விட மோசமாக கருகிப் போயிருக்கிறது.

சுட்டுருச்சே சுட்டுருச்சே

கொஞ்சம் நேரம் வண்டிய வெயிலே விட்டுட்டு போயிடேன். என்ன சூடு என்ன சூடு தட் பாய்ஸ் மைண்ட் வாய்ஸ்

நொங்கெடுக்கும் வெயிலுக்கு நுங்கு

என்னா வெயில்..107 டிகிரி... இதுக்கு இணை எதுவுமே இல்லை.. நொங்கெடுக்கும் வெயிலுக்கு சரியான மாற்று நுங்குதான்.

தனி கிரகமா மாறிருச்சு போலயே

அடிக்கிற வெயிலைப் பார்த்தா தமிழ்நாடு தனியா சுத்துது போல. வெயில் தாங்கமுடியலே...... இருந்தாலும் இருக்கும்.. செல்லூர் ராஜூவிடம் கேட்க வேண்டும்!

English summary
Summer is scorching in Tamil Nadu and people are taking various precautionary steps to avoid sun burn
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X