சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லா உற்று பாருங்க.. ஆஹா, இது நிருபர்களாச்சே.. தலைமுதல் கால்வரை பாதுகாப்பு.. அசத்தும் சன் டிவி

Google Oneindia Tamil News

சென்னை: நீங்கள், சமீப நாட்களில், சன் நியூஸ் சேனலை பார்த்தால் உங்களுக்கு ஒரு வித்தியாசம் பளிச்சென்று தெரிந்து இருக்கும். "யாரப்பா இவர்கள்.. நிலவுக்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்களை போல இருக்கிறார்கள்.. ஆனால் கைகளில் சன் டிவி லோகோவுடன் மைக் வைத்துள்ளார்கள்.." என்று கூட உங்களுக்கு தோன்றலாம். அவர்கள் வேறு யாருமல்ல. சன் டிவியின் நிருபர்கள் தான்.

இந்த நிருபர்கள் அணிந்திருக்க கூடிய ஆடை என்பது, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அணியக்கூடிய தனிநபர் பாதுகாப்பு உபகரண ஆடை (PPE).

கடந்த நான்கைந்து தினங்களுக்கு முன்பு இருந்தே சன் டிவி இந்த நோய் தடுப்பு நடவடிக்கையை கையிலெடுக்க தொடங்கிவிட்டது

சென்னை, கோவை உட்பட 5 நகரங்களில் முழு ஊரடங்கு.. காய்கறி கடை கூட திறக்காது.. முதல்வர் உத்தரவுசென்னை, கோவை உட்பட 5 நகரங்களில் முழு ஊரடங்கு.. காய்கறி கடை கூட திறக்காது.. முதல்வர் உத்தரவு

உச்சி முதல் பாதம் வரை பாதுகாப்பு

உச்சி முதல் பாதம் வரை பாதுகாப்பு

சென்னையில் சில ஊடகத்தை சேர்ந்த நிருபர்களுக்கு கொரோனா நோய் தோற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 30 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அதிரடியாக சன் டிவி நிர்வாகம் இப்படி ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. கைகளில் உரை, தலை முதல் பாதம் வரை முழுக்க மூடக்கூடிய வகையிலான ஆடை என இதில் அத்தனை வகையான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

தினமும் ஒரு ஆடை

தினமும் ஒரு ஆடை

இந்த வகை ஆடைகளை ஒருநாள் பயன்படுத்தினால் மறுநாள் பயன்படுத்த முடியாது. உடனே அதை மிகவும் பத்திரமாக உரிய சுகாதார முறைப்படி அகற்றவேண்டும். அப்படித்தான் சன்நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றிய கூடிய ஊழியர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த ஆடை கவசத்தின் விலை ஒவ்வொன்றும் 500 ரூபாய்க்கும் மேல் இருக்கும். ஆனாலும் தினமும் ஒரு ஆடை வழங்கி வருகிறது சன் டிவி நிர்வாகம்.

அலுவலகங்களில் ஆடைகள்

அலுவலகங்களில் ஆடைகள்

தினமும் வெளியில் பணியாற்ற தேவையுள்ள ஊழியர்கள் இவற்றை அலுவலகத்தில் இருந்து எடுத்து போட்டுகொண்டு கிளம்ப வேண்டும். பின்னர் பணி நேரம் முடிந்த பிறகு, அதை உரிய வகையில் அகற்றவேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாக இந்த பாதுகாப்பு உபகரணத்தை அணிந்து செல்வதற்கு வசதியாக, ஒவ்வொரு நகரத்திலும் உள்ள சன் நியூஸ் அலுவலகத்திலும், இந்த ஆடைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு

பாதுகாப்பு

நிருபர்களுக்கு மட்டும் கிடையாது. கேமராமேன்கள் மற்றும் அவர்களை அழைத்துச் செல்லக்கூடிய கார் டிரைவர், உள்ளிட்ட களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய அனைவருக்குமே இந்த பாதுகாப்பு உபகரணத்தை வழங்கி அசத்தியுள்ளது சன் டிவி நிர்வாகம். வேறு ஒரு நபரிடம் இருந்து இவர்களுக்கு நோய் தொற்று பரவாது என்பது ஒரு காரணம் என்றால், களத்தில் இறங்கி பணியாற்றக்கூடிய நிருபர்கள் அல்லது கேமராமேன்கள் யாருக்காவது ஒருவேளை நோய்த்தொற்று இருந்தால் கூட, அது பிறருக்கும் பரவாது.

அருமையான ஏற்பாடு

அருமையான ஏற்பாடு

சமூகத்திலிருந்து தங்களையும், தங்களிடமிருந்து சமூகத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு அருமையான ஏற்பாடு இது. மற்ற தொலைக்காட்சி ஊடகங்கள் இதுபோன்ற முன்னெடுப்பை இன்னும் எடுக்கவில்லை. அவர்களும் இதை செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

English summary
Sun TV management has provided personal protective equipment to their field reporters, cameraman and the car drivers to prevent coronavirus spread.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X