• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஐயோ அடிக்கிறாரு- இது நேத்து.. மன்னிப்பு கேட்டாரு விட்ருங்க- இது இன்று.. சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா

|

சென்னை: தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கணவர் மன்னிப்பு கேட்டதால் அந்த புகாரை ராதா வாபஸ் பெற்றுள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் மேலும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

தொடர்ந்து மவுனம் சாதிக்கும் நெடுஞ்சாலைத்துறை... பெரியார் சாலை என ஸ்டிக்கர் ஒட்டிய த.பெ.தி.க..!தொடர்ந்து மவுனம் சாதிக்கும் நெடுஞ்சாலைத்துறை... பெரியார் சாலை என ஸ்டிக்கர் ஒட்டிய த.பெ.தி.க..!

ராதா

ராதா

இதையடுத்து தனது குழந்தையுடன் வசித்து வந்தார் ராதா. இந்த நிலையில் இவருக்கும் எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. வசந்தராஜாவுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் அவரை ராதா திருமணம் செய்து கொண்டார்.

புகார்

புகார்

இருவரும் சாலிகிராமத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ராதாவின் நடத்தையில் வசந்தராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் நேற்றைய தினம் தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வருத்தம்

வருத்தம்

ஹைதராபாத்தில் இருந்து வந்த தனது தாய் மீதும் வசந்தராஜா தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் ராதா புகார் அளித்தார். இந்த நிலையில் ராதாவை நேரில் சந்தித்து வசந்தராஜா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது.

வாபஸ்

வாபஸ்

இதையடுத்து இன்றைய தினம் காவல் நிலையத்திற்கு வந்து தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் ராதா. 2013-ஆம் ஆண்டு தொழிலதிபரும் அதிமுக பிரமுகருமான பைசூல் மீது புகார் கொடுத்திருந்தார். இது போல் அவ்வப்போது தனது புகார்கள் மூலம் லைம்லைட்டில் இருந்து வருகிறார் நடிகை ராதா.

 
 
 
English summary
Sundara Travels Actress Radha withdraw her complaint against her husband
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X