சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஞாயிறு லாக்டவுன்.. தமிழகம் முழுக்க இன்று முழு முடக்கம்.. போலீசார் தீவிர கண்காணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 3500+ கேஸ்கள் தமிழகத்தில் வருகிறது. தமிழகத்தில் நேற்று 3965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 134226 ஆக உயர்ந்துள்ளது.

Sunday Lockdown imposed in all over Tamilnadu today

சென்னையில் மட்டும் நேற்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு 17989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. சென்னையிலும் முழு லாக்டவுன் முடிந்த நிலையில் தளர்வுகளுடன் லாக்டவுன் அமலில் உள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்கத்தில் ஜூலை மாதம் முழுக்க எல்லா ஞாயிற்றுக்கிழமையும் முழு லாக்டவுன் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

ஒரு மாதத்திற்கு பின் குட்நியூஸ்.. 7 நாட்களாக சென்னையில் சரியும் கொரோனா கிராப்.. இன்று 1185 கேஸ்கள்!ஒரு மாதத்திற்கு பின் குட்நியூஸ்.. 7 நாட்களாக சென்னையில் சரியும் கொரோனா கிராப்.. இன்று 1185 கேஸ்கள்!

அதன்படி இன்று லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. கடந்த வாரமும் இந்த லாக்டவுன் அமலில் இருந்தது. இதனால் தமிழகத்தில் பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருக்கும்.மற்ற கடைகள் திறந்து இருக்காது.

Recommended Video

    உலக நாடுகள் இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் - Prince Charles

    தமிழகம் முழுக்க இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    English summary
    Sunday Lockdown imposed in all over Tamilnadu today as cases surges.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X