சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசு வேலையில் சேர அருமையான வாய்ப்பு.. உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.1,82,400 வரை சம்பளம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு வேலையில் சேர அருமையா வாய்ப்பு அமைந்துள்ளது. உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2018-19 ஆம் ஆண்டிற்கான அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,340 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

super chance to join tamilnadu government jobs, tamil nadu government college assistant lecturer jobs

தாவரவியல் (89), வேதியியல் (188), கணிணி அறிவியல் (137) , ஆங்கிலம் (309), புள்ளியியல் (56), விலங்கியல் (100), புவியியல் (68), வரலாறு (67), வணிகவியல் (102), கணிதம் (192), தமிழ் (231), இயற்பியல்(150), பொருளாதாரம் (92), எலெக்ட்ரானிக்ஸ் (26), கம்ப்யூட்டர் அப்ளிகேசன் ( 57), கார்ப்பரேட் கெக்ரட்ரிஷிப் (25), அரசியல் அறிவியல் (29) விஷூவல் கம்யூனிகேசன் (21) உள்பட பல்வேறு துறைகளில் சுமார் 2340 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிபிஎம், பயோ கெமிஸ்ட்ரி, பயோலாஜி சைன்ஸ், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கோ ஆப்ரேசன், எலெட்ராகின்ஸ் கம்யூனினேசன் டிபன்ஸ் சைன்ஸ் உள்பட பல்வேறு துறைகளிலும் உதவிப் பேராசிரியர் காலிபணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவீத மதிப்பெண்களுடன் NET, SLET, SET, SLST, CSIR தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

https://www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மதிப்பெண் சலுகைகள் விவரம்: ஆசிரியர் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண், முனைவர் பட்டம் பெற்றிருந்தால் 9 மதிப்பெண், M.Phil உடன் SLET, NET,SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண், முதுகலை பட்டத்துடன் SLET, NET, SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள்.
நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2019. முழு விவரங்களை http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்ற லிங்கில் அறியலாம்.

English summary
2,340 Assistant Professor Vacancies, super chance to join tamilnadu government jobs, Assistant Professor Vacancies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X