• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சூப்பர் ஸ்டாலின்.. ஒரு கையில் பணம்.. இன்னொரு கையில் மளிகை.. அமைச்சர் போட்ட போட்டா.. செம வைரல்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசுக்கு பாராட்டு மேல் பாராட்டு குவிந்து கொண்டிருக்கிறது.. இன்று ரேஷனில் நிவாரண தொகையும், மளிகை பொருட்களையும் மக்கள் திருப்தியுடன் பெற்று கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்..!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.. இதனால் பொதுமக்கள் பாதிக்கக்கூடும் என்பதால் எல்லா குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்..

2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டுவிட்டது.. 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் ஜுன் மாதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது..

அரசு

அரசு

மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மளிகைப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. 14 வகையான மளிகைப்பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரே‌ஷன் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கப்படும் என்று சிவில் சப்ளை துறை மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.. இதற்கான டோக்கன் கடந்த வாரம் வீடு, வீடாக வினியோகிக்கப்பட்டது. மேலும் கடையில் கூட்டம் குவிந்துவிடக்கூடாது என்பதற்காக, தினமும் 200 பேர் வீதம் அழைக்கப்படுகின்றனர்.

 ரேஷன் கடை

ரேஷன் கடை

இன்றுமுதல், கொரோனா நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்கள் வினியோகிக்கும் பணிகள் தொடங்கியது.. மாநிலத்தில் உள்ள 33 ஆயிரம் ரே‌ஷன் கடைகள் மூலமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.. ஏற்கனவே தந்திருந்த டோக்கனில் உள்ளபடி, சம்பந்தப்பட்ட நபர்கள் இன்று அந்தந்த கடைகளுக்கு சென்று பணத்தையும், மளிகைப் பொருட்களையும் ஒரே நேரத்தில் பெற்று கொண்டனர். இதுபோல ஒவ்வொருவரும் டோக்கனில் உள்ள தேதிகளில் கடைக்கு சென்று பெற்று கொள்ளலாம்.. இந்த பணி இந்த மாதம் முழுவதும் நடக்கும்..!

 திமுக அரசு

திமுக அரசு

திமுக அரசின் இந்த செயல்பாடு, மக்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.. பொதுவாக, ஒரு அரசு திட்டத்தை அறிவித்தால் அதை செயல்படுத்தி காட்டுவது அரிது.. இதற்கு முந்தைய காலங்களில் எத்தனையோ அறிவிப்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.. ஆனால், முதல்வர் ஸ்டாலின் சொன்ன மாதிரியே, அறிவிப்பு வெளியிட்டு, ஒரே மாசத்தில், 2 கட்டமாக அதனை செய்து காட்டி உள்ளார்.

 கஜானா

கஜானா

எடப்பாடி அரசு விலகியபோது, அரசின் கஜானா காலியாக இருந்தது.. இப்போதும் அப்படியேதான் நிதிநிலைமை படுமோசமான சூழலில் உள்ளது.. எனினுடம், லாக்டவுன் சமயத்தில் மக்கள் யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிரமம் எடுத்து, இந்த திட்டத்தை அரசு குறுகிய காலத்தில் செய்து காட்டி உள்ளது.. இது நிச்சயம் ஏழை எளிய மக்களுக்கு பலனை தந்துள்ளது.. இதன் முத்தாய்ப்பாகத்தான் ஒரு போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது.

 வைரல் போட்டோ

வைரல் போட்டோ

ஒரு பாட்டி வாய் நிறைய சிரிக்கிறார்.. அப்போதுதான் ரேஷன் கடைக்கு போய் நிவாரண பணத்தையும், மளிகை பொருட்களையும் வாங்கி வருகிறார் போலும்.. ஒரு கையில் காசு, இன்னொரு கையில் மளிகை பொருட்களை ஏந்தியபடி, பொக்கை வாய் சிரிப்பை காட்டுகிறார்.. "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என்ற கேப்ஷனுடன் இந்த போட்டோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ட்வீட் செய்துள்ளார்..

 பாராட்டு

பாராட்டு

இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. அதிலும் சிலர், "உண்மைதான் ஐயா.. ஆனால், மதுக்கடைகளை திறந்து விடாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. திமுக அரசுக்கும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.. இணைய தளம் முழுவதும் இந்த பொக்கை வாய் பாட்டிதான் சிரித்து கொண்டிருக்கிறார்..!

English summary
Super CM Stalins announcement and Collection of groceries in ration shops, viral photo
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X