சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிவியில் பாமக கூட்டணி நியூஸ் பாத்தீங்களே.. நேத்து ராத்திரி வானத்தில் சூப்பர் மூன் பார்த்தீங்களா?

நேற்றிரவு வானத்தில் சூப்பர் ஸ்நோ மூன் தெரிந்ததால் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றிரவு கருப்பு வானத்தில் வெள்ளை நிலா அவ்வளவு அழகாக இருந்தது.. அதனால்தான் இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

சாதாரண நாட்களில் தெரியும் நிலாவைவிட இந்த வருஷம் குறிப்பாக நேற்றிரவு நிலா பெரிதாக தெரிந்தது. இதற்கு சூப்பர் மூன் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.

Super Moon 2019

இந்த சூப்பர் மூன் நிகழ்வின் போது நிலா பூமிக்கு ரொம்ப பக்கத்திலேயே தோன்றியது. சூப்பர் மூன் என்பது மற்ற நாட்களில் நமக்கு தெரியும் நிலாவின் அளவினை விட, 14 சதவீதம் பெரியதாக தெரிந்தது. அதேபோல, 30 சதவீதம் அதிக ஒளி வீசக்கூடியதாக இருந்தது. இதுபோல அதிசயம் வருஷம் எப்பவுமே நடந்தது கிடையாது.

எப்படி இந்த சூப்பர் மூன் தோன்றும்போது அழகோ, அதுபோல விடிகாலையில் மறையும் போதும் சூப்பர் நிலவின் தோற்றம் எப்பவுமே அழகாகத்தான் தெரியுமாம்.

அதனால்தான் பல்வேறு நாடுகளில் கண்ணுக்கு அருகிலேயே தெரிந்த நிலாவை மக்கள் கண்டு களித்தனர். இந்த சூப்பர் மூனின் முழு வடிவத்தை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்தும், செல்பி எடுத்தும் கொண்டனர்.

இதற்கு முன்பு இந்த சூப்பர் மூன் கடந்த 2011ம் ஆண்டு தெரிந்தது என்றாலும், இந்த நிலாவை நாம் திரும்பவும் 2026ம் ஆண்டில் தான் பார்க்க முடியுமாம்.

English summary
2019's Biggest and brightest full Super moon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X