சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சிக்னல்" வந்தாச்சு.. முதல்வருக்கு வந்த "ரிப்போர்ட்".. வேட்டியை மடித்துகட்டி களமிறங்கும் அமைச்சர்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த அதிரடி ஆரம்பமாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக மேல்மட்டம் செம குஷியில் உள்ளது.. மூத்த தலைகளும், நிர்வாகிகளும், அமைச்சர்களும் தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் தேர்தல் களம் இறங்கிவிட்டனர்.. இதற்கெல்லாம் காரணம் அந்த குட் நியூஸ் ரிப்போர்ட்தான்..!

இந்த முறை தேர்தல் அதிமுகவுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது.. ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்த 4 வருஷத்தை ஓட்ட எடப்பாடியார் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது..

அதேசமயம், இந்த ஆட்சியை தக்க வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், நிர்ப்பந்தமும், கட்டாயமும் எடப்பாடியாருக்கு கூடுதலாக வந்து சேர்ந்துள்ளது.

 சமாளிப்பு

சமாளிப்பு

இன்னொரு பக்கம் விஸ்வரூபமெடுத்து வரும் திமுகவை சமாளிக்க படாதபாடு பட வேண்டி இருக்கிறது.. ஆட்சி அமைக்க ஸ்டாலின் பலவித வியூகங்களை முன்னெடுத்து வந்தால், அவை அத்தனையையும் திருப்பி போட்டு, தவிடுபொடியாக்கி மேலே வந்து கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கலக்கம்

கலக்கம்

மற்றொரு பக்கம் சசிகலாவின் வருகை குடைச்சலையும், லேசான கலக்கத்தையும் தந்து வருகிறது.. இருந்தாலும் தன் மீதும், தன் அரசு மீதும் உள்ள நம்பிக்கையால் தனி நபராகவே சமாளித்து வருகிறார் எடப்பாடி.. அத்துடன் தன் நிர்வாகிகளையும், அமைச்சர்களையும் சசிகலா பக்கம் சென்றுவிடாதவாறும் கடிவாளம் போட்டும், அரவணைத்தும் வருகிறார்.

அமைச்சரவை

அமைச்சரவை

இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கான கேபினெட் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் நடந்துள்ளது.. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் பற்றி விவாதிக்கப்பட்டாலும், முக்கியமான பேச்சு தேர்தலை பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது.. காரசாரமாக விவாதிக்கப்பட்டும் உள்ளது. நிறைய விஷயங்களை அமைச்சர்களிடம் மனசு விட்டு பேசினாராம் எடப்பாடியார்.

 சர்வே ரிப்போர்ட்

சர்வே ரிப்போர்ட்

"உளவுத்துறை ஒரு சர்வே ரிப்போர்ட் எடுத்திருக்காங்க.. அதில், எந்த ஒரு கட்சிக்கும் 100 சதவீத ஆதரவு அலை வீசவில்லை.. சர்வே எடுக்கும்போது ஒரு மாதிரியாகவும், தனிப்பட்ட முறையில் பேசும்போது வேறுவிதமாகவும் கருத்துகளை வாக்காளர்கள் பதிவு செய்கிறார்கள்... அதனால் உங்களின் விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒரு ஓரமாக தூக்கி போட்டுவிட்டு தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்க.. அப்படி செய்தால் இந்த முறையும் நாமதான் ஆட்சி..

 பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகள் என்னவென்று பாருங்க.. அம்மா இருக்கும்போது, தேர்தலில் எப்படி கவனம் செலுத்துவோமோ அந்த மாதிரியே இப்பவும் களமிறங்குங்க.. நாம தந்த பொங்கல் பரிசு 2500, பயிர் கடன் தள்ளுபடி இதெல்லாம் நமக்கு நல்ல சிக்னலை தந்திருக்கு.. இனிவரும் அறிவிப்புகளும் நமக்கு கைகொடுக்கும்.. நாம மறுபடியும் ஒரு குடும்பத்தின் அதிகார வளையத்துக்குள் சிக்கிவிடக் கூடாது.. என்றாராம்.

 தடித்த வார்த்தை

தடித்த வார்த்தை

அதுமட்டுமல்ல, அநாகரீகமாக எங்கும் பேசிடாதீங்க.. சின்ன விஷயம்தான் பெரிதாக பேசப்பட்டுவிடும்.. கவனமா பேசுங்க.. பேட்டி தரும்போதும் கவனமாக இருங்க.. யாரையும் மரியாதைக்குறைவாக பேசக்கூடாது.. முக்கியமாக ஒருமையில் பேசக்கூடாது.. நாம அப்படி பேசணும்னுதான் எதிரிகள் எதிர்பார்க்கறாங்க. அதுக்கு பலியாகிடக்கூடாது என்று அமைச்சர்களுக்கு அட்வைஸ் தந்துள்ளார் எடப்பாடியார்..

 செம குஷி

செம குஷி

இதற்கு காரணம், கடந்த சிலதினங்களாகவே சிவி சண்முகம் முதல் ஒருசில அமைச்சர்கள் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி சர்ச்சை வரை சென்றுவிட்டதால், முதல்வர் இவ்வாறு அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. எடப்பாடியார் இப்படி பேசுவதை கேட்ட அமைச்சர்களுக்கு புது தெம்பே வந்துவிட்டதாம்.. சர்வே ரிப்போர்ட் சாதகமாக வந்திருப்பது கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.. அதனாலேயே அதிமுக மேலிடம் பம்பரம் போல இப்போது சுழன்று சுழன்று வேலை பார்த்து கொண்டிருக்கிறது..!

English summary
Super plan, CM Edapadi Palanisamy discussed about TN Assembly Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X