• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"நாங்க இருக்கோம் பிரதீப்".. குவியும் ஆதரவு.. கடைசியில் தமிழ்நாடு வெதர்மேனையும் விட்டு வைக்காத விஷமம்

|

சென்னை: "நாங்க இருக்கோம் பிரதீப்" என்று பொதுமக்களின் ஆதரவு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதியிடம், "இளைஞர் பிரதீப் ஜான் என்பவர், தன்னுடைய "முகநூல்" பக்கத்தில் தமிழகத்தின் வானிலை பற்றி தெரிவிக்கும் செய்திகள் மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பதாகப் பேசப்படுகிறதே?" அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கருணாநிதி, "உண்மைதான்... தமிழகத்திலே எந்தப் பகுதியிலே எவ்வெப்போது கன மழை என்று இந்த இளைஞர் ஆராய்ந்து தெரிவிக்கும் முன்னறிவிப்புகள் உண்மையாகவும், உதவிகரமாகவும் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள்... நானும் அந்த இளைஞருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்

ஆதரவு

ஆதரவு

இப்படி அறியப்பட்டவர்தன் "தமிழ்நாடு வெதர்மேன்" என அறியப்படுபவர் பிரதீப் ஜான்.. வானிலையை கணித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருபவர்.. வானிலையை தன் காதலாக செய்து வருபவர்.. சிறந்த தன்னார்வலர். 2015-ல், சென்னையில் வெள்ளம்வந்தபோது, மக்களிடையே அதிக அளவு ஃபேமஸ் ஆனார் பிரதீப்.. அதைதொடர்ந்து சென்னையில் எப்போது மழை, புயல், வெள்ளம் வந்தாலும், மக்கள் நாடி சென்று தேடுவது இவரது ட்வீட்டுகளைதான்.

கணிப்புகள்

கணிப்புகள்

இதுவரை இவர் பதிவிட்ட எந்த புயல், வெள்ள கணிப்புகளுமே பொய்யானதில்லை! மிக குறுகிய காலத்தில் லட்சக்கணக்கானோரின் ஆதரவை இவர் பெற்றுவிட்டார்.. இத்தனைக்கும் தன்னை சோஷியல்மீடியாவில் பின்தொடரும்படி யாரையுமே இவர் நிர்ப்பந்தித்ததில்லை!

 வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதீப் ஜான் மீது மதரீதியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.. "சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரனைப் பற்றி வேண்டுமென்றே அவதூறு பரப்பிவருகிறார் பிரதீப் ஜான்... அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யவேண்டும்'' என இளங்கோ பிச்சாண்டி என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட அதை மேற்கோள் காட்டி சிலர் தன்மீது வன்மத்தை கொப்பளித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பிரதீப் ஜான்.

தவறு

தவறு

"பிரதீப் ஜான் ஒரு ஏமாற்றுகாரர் என்றும், நிவர் புயலின் போதும் அவரது கணிப்பு தவறாகத்தான் இருந்திருக்கிறது" என்றும் அரசு இவர் போன்ற ஆட்களை விட்டுவைக்க கூடாது... பொதுவெளியில் மக்கள் மத்தியில் இவர் கொல்லப்படவேண்டும்'' என்றும் பதிவுகள் வந்துள்ளன.. இந்த அவதூறுகள் பிரதீப்பை மனதளவில் காயப்படுத்தியும் உள்ளது.

ஆதரவு

ஆதரவு

"நான் மதமாற்றத்துக்கு ஆதரவு அளித்து எந்த பதிவுமே வெளியிட்டதில்லை. எந்த மதமாக இருந்தாலும் அதை நான் ஆதரிப்பதும் இல்லை. அப்படி என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே போலியானவை. எல்லா நேர்காணல்களிலும் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு எனது ஆதரவைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன்" என்று விளக்கம் தந்தாலும், பிரதீப் மீதான காழ்ப்புணர்ச்சி இன்னமும் தொடர்வது வேதனையாக இருக்கிறது.

 துல்லியம்

துல்லியம்

வானிலை குறித்து இவர் ஒவ்வொருமுறையும் முன்னறிவிப்புகள் சொல்லும்போதும், சில அதிகாரிகள் எரிச்சல் அடைந்திருக்கவும் செய்தனர்.. உண்மையை சொல்லபோனால், நிவர் புயல் கரையை கடக்கும் இடத்தை, மத்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தை விடவும் மிகவும் துல்லியமாக கணித்தது ப்ரதீப் ஜான்தான்!

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

ஒருவரை கொல்லப்பட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு பிரதீப் செய்த தவறு என்ன? இவர் இந்துவாக இல்லாததுதான் தவறா? விஜய் என்பவர் ஜோசப் விஜய்யாக சொல்ல தொடங்கியபோதே இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் விட்டது யார் தவறு? பிரதீப் ஜானுக்கு வானிலை மட்டுமே தொழில் இல்லை.. அவருக்கு வேறு வேலை இருக்கிறது.

சமுதாயம்

சமுதாயம்

இதை ஒரு ஆர்வத்தில், மக்களுக்கான விழிப்புணர்வாக எடுத் செய்து வருகிறார்.. நமக்கெல்லாம் இப்படி நேரத்தை வீணாக்கி, இத்தனை பேரின் எதிர்ப்பையும் சம்பாதித்து கொண்டு, வானிலையை கணித்து சொல்வதில் அவருக்கு அப்படி என்ன கிடைத்துவிட போகிறது? ஒரு நபர் இந்த சமுதாயத்துக்காக உழைக்க வந்தால், அதை பயன்படுத்தி கொள்வதுடன், அவரையே மத ரீதியாக வெறுப்பை உமிழ்வது நாகரீகமானது இல்லை.. ஆனால் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்து கருத்தக்களை பதிவிட்டு வருகின்றனர்.. "நாங்க இருக்கோம் பிரதீப்" என்று சொல்லும்போது, மதம், இனம் ரீதியிலான அனைத்து பாகுபாடுகளும் சுக்குநூறாக நொறுங்கி சிதறி கொண்டிருக்கிறது!

 
 
 
English summary
Super Public Supporting to Tamilnadu Weatherman Pradeep John
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X