சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மாப்பிள்ளை வியூகம்".. அடித்து தூக்கிய ஸ்டாலின்.. அடுத்தடுத்த சிக்ஸர்கள்.. திகிலில் எதிர்க்கட்சிகள்

ஸ்டாலினின் திமுக அரசு இந்த 2 மாத காலமாகவே சிறப்பான குழுக்களை அமைத்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசின் இந்த 2 மாத அதிரடிகள் மக்களை ஈர்த்து வருகின்றன.. அதேசமயம், இதற்கெல்லாம் காரணகர்த்தா யாராக இருக்கும் என்ற ஆச்சரியமும் எழுந்தபடியே வருகிறது.

Recommended Video

    ஒன்றியம் என்றுதான் அழைப்போம்.. பாஜக கேள்விக்கு முதல்வர் Stalin பதிலடி.

    மிகப்பெரிய நெருக்கடியான நேரத்தில்தான் முதல்வர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின்.. கொரோனா தொற்று பாதிப்பு என்பது, ஒரு மாநிலத்துக்கு சுகாதார நெருக்கடியை மட்டும் தந்துவிடுவதில்லை..

    மாறாக, மிகப்பெரிய பெரும் பொருளாதார நெருக்கடிக்கும் வித்திட்டுவிடும்.. அந்த வகையில் ஒரு பக்கம் நோய், மறுபக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஸ்டாலின் ஆளானர்.

     திமுக அரசு

    திமுக அரசு

    என்னதான் மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், தடுப்பூசிகள், நிதி ஒதுக்கீடு என்று வரும்போதெல்லாம், அது மத்திய அரசின் கையில் உள்ளது.. கடந்த காலங்களில் இருந்து இப்போது வரை, பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது திமுக.. கொள்கை அளவிலும் முரண்பாடு கொண்ட கட்சி.. அதனால், மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது என்பது ஸ்டாலின் முன் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சவால்.

     நிதி

    நிதி

    கொள்கை ரீதியாகவும் எதிர்கொண்டு, மாநில உரிமைகளையும் பெற்று தர வேண்டிய நிலைமையில் திமுக உள்ளது.. அதனால்தானோ அமைச்சர்கள் நியமனத்தில் இருந்து அதிகாரிகள் நியமனம் வரை பார்த்து பார்த்து கவனமாக செயல்பட்டு வருகிறார்.. திறமையான அமைச்சர்கள் ஒருபக்கம், "மிஸ்டர் கிளீன்" என்று சொல்லப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மறுபக்கம் என அசத்தியது, பாஜகவுக்கு ஒரு ஜெர்க் தந்தது என்றே சொல்லலாம்.

     ஜெயரஞ்சன்

    ஜெயரஞ்சன்

    இதற்கு பிறகு திட்டக்குழு துணை தலைவராக, ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் நியமனமும் நடந்தது.. ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு நிதி வந்து சேரவில்லை... ஜிஎஸ்டி பணமும் வரவில்லை.. அந்த கோபத்தில் தமிழக மக்கள் இருக்கும்போது, "எங்களுக்கு தர வேண்டியதை தந்துதான் ஆகணும்" என்று கேட்பதற்கு இதுவரை தமிழகத்தில் பொருத்தமானவர்கள் யாரும் இல்லாமல் இருந்த நிலையில்தான் ஜெயரஞ்சனின் நியமனம் பலருக்கும் மகிழ்ச்சியை தந்தது.. நம்ம பணம் எப்படியாவது இனி வந்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

     குழு

    குழு

    2 நாட்களுக்கு முன்பும், 5 பேர் கொண்ட குழுவை ஸ்டாலின் அரசு நியமித்துள்ளது.. கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது தமிழ்நாடு... இனி மாநிலத்தை மாற்றி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளதாலும், தொற்றால் பாதிப்பில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், நிதி நிலையை சீர் செய்யவும் பொருளாதார ஆலோசனைக்குழுவில் 5 பேர் அமைக்கப்பட்டுள்ளனர்.

     ஆலோசகர்கள்

    ஆலோசகர்கள்

    எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஜீன் ட்ரெஸ், ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இடம்பெற்றும் உள்ளனர்.

     பாஜக

    பாஜக

    கருணாநிதி இறந்ததில் இருந்தே, திமுகவின் பல்வேறு முக்கிய விவகாரங்களை கவனித்து கொள்வது, மாப்பிள்ளை சபரீசனாக இருந்து வருகிறது.. இந்த 4 வருட காலமாக நடந்த தேர்தலில் சபரீசனின் பங்கு அளப்பரியது.. சிறப்புக்குரியது.. ஐபேக் டீமை அறிமுகப்படுத்தியதில் இருந்து கூட்டணி விவகாரங்கள் வரை சபரீசன் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.. ஒருவேளை அவரது பங்களிப்பும், திமுகவின் இந்த 2 மாத கால செயல்பாடுகளில் இருக்கலாம் என்கிறார்கள்.

     நியமனம்

    நியமனம்

    தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் முதல்வர் ஸ்டாலின் நன்கு அறிந்திருந்தாலும், இன்னென்ன துறைக்கு, இன்னென்ன குழுக்களை, இன்னென்ன அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த யாராவது பெரிய பின்புலம் ஒன்று இருக்கவே செய்யும்.. அந்த வகையில் அது யாராக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.

     சபரீசன்

    சபரீசன்

    கருணாநிதி இறந்ததில் இருந்தே, திமுகவின் பல்வேறு முக்கிய விவகாரங்களை கவனித்து கொள்வது, மாப்பிள்ளை சபரீசனாக இருந்து வருகிறது.. இந்த 4 வருட காலமாக நடந்த தேர்தலில் சபரீசனின் பங்கு அளப்பரியது.. சிறப்புக்குரியது.. ஐபேக் டீமை அறிமுகப்படுத்தியதில் இருந்து கூட்டணி விவாரங்கள் வரை சபரீசன் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.. ஒருவேளை அவரது பங்களிப்பும், திமுகவின் இந்த 2 மாத கால செயல்பாடுகளில் இருக்கலாம் என்கிறார்கள்.

     பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    அல்லது, பிரசாந்த் கிஷோரின் பங்கும் அபரிமிதமாக இருக்கலாம் என்ற யூகமும் வலுக்கிறது.. காரணம், பாஜகவுக்கு மாற்றான ஒரு அணியை தேசிய அளவில் திரட்டும் முயற்சியில்தான் பிகே ஈடுபட்டு வருகிறார்.. நேற்றுகூட சரத்பவாரை பார்த்து பேசியுள்ளார்.. மம்தாவுக்கும், ஸ்டாலினுக்கும் பெருத்த நம்பிக்கைக்கு பாத்திரமானவரும்கூட..!

     வரவேற்பு

    வரவேற்பு

    இந்த 2 மாத காலத்தில் ஸ்டாலின் அமைத்து வரும் குழுக்கள், நியமித்து வரும் அதிகாரிகள் பலரும் பாஜகவுக்கு எதிரான மனநிலைமையை கொண்டவர்கள்தான்.. இவர்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள்தான்.. இதனால் பாஜகவின் நேரடியான கோபத்துக்கும் ஆளானவர்கள்தான்.. அந்த வகையில், முதல்வரின் இந்த அதிரடிக்கெல்லாம் பிகேவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற நினைக்க தோன்றுகிறது... ஆனால், யாராக இருந்தாலும் சரி, பாஜகவுக்கு செக் வைக்கும் வகையிலும், நம் மாநில உரிமைகளுக்கு பங்கம் வராத வகையிலும் செயல்பட்டு வரும் ஸ்டாலினின் செயல்பாடு மெச்சத்தக்கதே..!

    English summary
    Super Team formed by DMK and MK Stalins new announcements
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X