India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்பநிதி கையில் "முட்டை".. உற்றுப் பார்த்து பூரித்துபோன உதயநிதி ஸ்டாலின்.. என்னன்னு பாருங்க.. செம்ம

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய மகனின் போட்டோ ஒன்றை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.. இது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, சீங்குளி எனப்படும் பழங்குடி கிராமம் ஒன்று பேசுபொருளானது.. கோவை மாவட்டம், தோலம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளதுதான் இந்த சீங்குளி என்ற கிராமம்.

இந்த கிராமத்தில் புதிதாக உதயா நகர் என்ற ஏரியா உருவானது.. இந்த பகுதியில் உதயநிதியின் பேனர் ஒன்றும் அப்போது வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் பதவி.. நோ சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. ஏமாற்றத்தில் உதயநிதி அமைச்சர் பதவி.. நோ சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. ஏமாற்றத்தில் உதயநிதி

 உதயா நகர்

உதயா நகர்

உதயநிதி சட்டை காலரில் கைவைத்திருப்பது போன்று அந்த போட்டோ இருந்தது.. உதயா நகர் என்று எழுதப்பட்ட போர்டு மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும், துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், திடீரென இப்படி ஒரு ஏரியாவை உருவாக்கியது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. தனக்குப் பதவி மேல் ஆசையில்லை என்று இதே கோவையில் நடந்த கூட்டத்தில் உதயநிதி அன்று அழுத்தமாக சொன்னார்.

இன்பநிதி

இன்பநிதி

ஆனாலும், "மாதத்துக்கு ஒரு முறை கோவை வருவேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், மாதத்தில் 10 நாள்கள் உங்களுடன் தங்கியிருந்து பணி செய்வேன்" என்று உதயநிதி உறுதி கூறினாலும், உதயா நகர் என்ற பகுதியை மக்கள் உருவாக்கும் அளவுக்கு சென்றுவிட்டது வியப்பாகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்ல, அந்த ஏரியாவில் பிறந்த ஒரு ஆண்குழந்தைக்கு, இன்பநிதி என்றும் பெயரை வைத்தது அதற்குமேல் ஆச்சரியத்தை கிளப்பியது...

 மேலிடம்

மேலிடம்

கருணாநிதி இருந்தபோது, ஸ்டாலினுக்கான முக்கியத்துவத்தை திமுகவினர் தந்ததுபோல, உதயநிதிக்கான முக்கியத்துவத்தையும் அவரது மகனுக்கு தர ஆரம்பித்துவிட்டதே இதன் அடிப்படையாக பார்க்கப்பட்டது. ஆனால், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று உதயநிதியின் மகன் இன்பநிதி இருந்தாலும், திமுகவினர் சும்மா இருப்பதில்லை.. மேலிடத்தின் மீது தங்களுக்கு இருக்கும் விசுவாசத்தையும், அபரிமிதமான அன்பையும் இப்படி வெளிப்படுத்தி வருவதாகவே தெரிகிறது..

ஏர்போர்ட்

ஏர்போர்ட்

இன்பநிதியை பொறுத்தவரை, விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்.. சில மாதங்களுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக இன்பநிதி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.. அந்த போட்டியில் கலந்து கொள்ள வெளிநாட்டிற்கு செல்வதற்காக, இன்பநிதி ஏர்போர்ட் வந்தபோது, அவரை, அவரது தாத்தா முதல்வர் ஸ்டாலின், அப்பா உதயநிதி உள்ளிட்டோர் ஏர்போர்ட்டிற்கு வந்து வழியனுப்பி வைத்த வீடியோக்களும் வைரலானது.

 கருணாநிதி

கருணாநிதி

கருணாநிதியை பொறுத்தவரை, கிரிக்கெட்டின் மீது ஆர்வமுடையவர்.. அவர் பெரும்பாலும் ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் போட்டிகளைதான் ஆர்வத்துடன் பார்ப்பார்... குறிப்பாக, சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் கருணாநிதி... ஆனால், கருணாநிதியின் கொள்ளுப்பேரன் இன்பநிதியோ, கால்பந்து விளையாட்டில் கால்பதித்து வருவது பலராலும் ஈர்க்கப்பட்டது. சினிமா, அரசியல் என்று ஆயிரம் பிஸி இருந்தாலும், அடிக்கடி தன்னுடைய மகனின் போட்டோக்களை ட்விட்டரில் ஷேர் செய்து வருவார் உதயநிதி.

பூரிப்பு

பூரிப்பு

ஒவ்வொரு முறையும் உதயநிதி, தன்னுடைய மகனின் போட்டோவை பதிவிடும்போது, ரசிகர்களும் திமுகவினரும் திரண்டு வந்து பாராட்டு தெரிவிப்பார்கள்.. மகனை விட அப்பா இளமையாக இருக்கிறாரே என்று கமெண்ட்டுகளை பதிவிடுவது வழக்கம்.. இன்றும் மகனின் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார் உதயநிதி.. அதில், இன்பநிதி தன்னுடைய கையின் பலத்தை காட்ட, அதனை உதயநிதி மிரட்சியுடன் பார்க்கிறார்.. மகனின் "வளர்ச்சியை", தந்தை பூரித்து பார்க்கும் இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

English summary
super tweet and udhayanithi stalin shares a photo with his son inbanithi இன்பநிதியின் போட்டோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X