சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை பில்ரோத் மருத்துவமனையின் 5 மாடிகளை இடிக்க கூறிய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

Google Oneindia Tamil News

சென்னை: அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனை 9 மாடிகளை கொண்ட கட்டிடம். இதில் விதிகளை மீறி கட்டப்பட்ட 5 தளங்களை இடித்து தள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு இப்போது உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை அமைந்தகரையில் 9 மாடிகளோடு பில்ரோத் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதில் 5 மாடிகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Supreme Court issued interim ban to demolish the Billroth Hospital

அதோடு ஜூன் 16ஆம் தேதியன்று பில்ரோத் மருத்துவமனையின் ஐந்து மாடிகளை இடிக்கும்படி தமிழக அரசுக்கும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டது. மூன்று மாடிகளுக்கு மேல் உள்ள கட்டடங்களில் மின் விநியோகத்தை நிறுத்தும்படியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரித்த இந்து மல்கோத்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பில்ரோத் மருத்துவமனை சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.என்.சிங்வி வாதிட்டார். இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

எல்லாம் செஞ்சும்.. எல்லோருக்கும் கொடுத்தும்.. எப்படி தோத்தோம்.. அமமுகவின் அதிரடி ஆய்வு! எல்லாம் செஞ்சும்.. எல்லோருக்கும் கொடுத்தும்.. எப்படி தோத்தோம்.. அமமுகவின் அதிரடி ஆய்வு!

அதோடு கட்டுமான ஒப்புதல் விதிமீறல் காரணமாக சென்னை பில்ரோத் மருத்துவமனையின் எட்டு தளங்கள் கொண்ட கட்டடத்தில் ஐந்து மாடிகளை இடிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் ஐந்து மாடிகளிலிருந்து வெளியேற வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த இடத்தை வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கும்படி பில்ரோத் மருத்துவமனை சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.என்.சிங்வி வாதிட்டார். அதைக் கேட்ட நீதிபதிகள் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளது. மூன்று மாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மேல் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை" என்று தெரவித்தனர்.

அதோடு தற்போதைக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறிய நீதிபதிகள் ஆனால் அந்த கூடுதல் கட்டடங்களை பயன்படுத்த கூடாது என்றும் தெரிவித்தனர். 2009ஆம் ஆண்டில் அனுமதியில்லாமல் எட்டாவது மாடி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளீர்கள். ஒப்புதல் இல்லாமல் அந்த இடத்தை பயன்படுத்தியிருக்கிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு இவ்வாறு செய்துள்ளீர்கள் என்று கடிந்து கொண்ட நீதிபதிகள் மேற்கொண்டு வழக்கு விசாரணை முடியும்வரை அந்த இடத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. நீங்கள் உடனடியாக அந்த இடத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்." என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை கோடை விடுமுறை நாட்களுக்குப் பின் நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

English summary
The Supreme Court has issued interim ban for the Madras High Court order to demolish the Billroth Hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X