சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசின் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு- உச்சநீதிமன்றத்தில் பிப்.17-ல் விசாரணை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தொடரப்பட்ட மற்றொரு வழக்கை உச்சநீதிமன்றம் பிப்ரவரி 17-ந் தேதி விசாரிக்கிறது.

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன், அரசியல் சாசன சட்ட பாதுகாப்புடன் தனித்துவமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த 69% இடஒதுக்கீடுக்கு எதிராக அவ்வப்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படும். ஆனால் அரசியல் சாசனப் பாதுகாப்புடன் இருப்பதால் 69% இடஒதுக்கீடு ஆபத்து இல்லாமல் தொடருகிறது.

Supreme Court to hear plea against TNs 69% Reservation Quota on Feb 17

இந்நிலையில் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் தினேஷ் என்ற மாணவர் ஒருவரும் உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, பிற மாநில இடஒதுக்கீடு வழக்குகளுடன் 69% இடஒதுக்கீடு வழக்கை விசாரிக்க கூடாது; தமிழக 69% இடஒதுக்கீடு தனித்தன்மையானது என தமிழக அரசு சார்பாக வாதிடப்பட்டது. இவ்வழக்கின் நேற்றைய விசாரணையின் போது இடையீட்டு மனு தாக்கல் செய்தவர் சார்பாக ஆஜரான கபில்சிபல், மராத்தா இடஒதுக்கீடு வழக்குடன் 69% இடஒதுக்கீடு வழக்கை சேர்க்கலாம் என்றார். இதற்கும் தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 69% இடஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவுக்கு மத்திய அரசு விளக்கம் தர உத்தரவிட்டனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். மேலும் ஏற்கனவே காயத்ரி என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் தினேஷ் வழக்கும் பிப்.17-ல் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court will hear a plea against Tamilnadu's 69% Reservation Quota on Feb 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X