• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பேஷன் ஷோவில் குத்தாட்டம் போட்டு ஜெயித்த சுரேஷ் அர்ச்சனா... இதை யாருமே எதிர்பார்க்கலையே

|

சென்னை: பேஷன் ஷோவில் பாலாஜியும் ஷிவானியும்தான் ஜெயிக்கப்போறாங்க என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அப்பா மகளாக வந்து அசத்தலாக குத்தாட்டம் போட்டு வெற்றி பெற்றுள்ளனர் சுரேஷ் அர்ச்சனா ஜோடி. இந்த ஜோடி ஜெயிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

பிக்பாஸ் வீட்டில் சண்டை சச்சரவுக்கு இடையே சில சந்தோஷ சம்பவங்களும் நடைபெறும். இந்த வாரம் நடந்த தங்கம் சேகரிக்கும் டாஸ்கில் நன்றாக விளையாடிய இரு நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அதில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் பாலாஜியை தேர்ந்தெடுத்தனர். அதை தொடர்ந்து நிஷாவின் பெயரையும் ஹவுஸ்மேட்ஸ் கூறினர்.

Suresh Archana, who won the fashion show, is not expecting this

பிக் பாஸ் வீட்டில் அனைத்திலும் ஈடுபாட்டுடன் இருந்தார் என்று சோமின் பெயரை சொன்னார்கள். பாலாஜி, சோம், நிஷா என மூன்று நபர்களும் கேப்டன் பதவிக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என பிக் பாஸ் அறிவிக்க, எப்படி இருந்தாலும் பாலாஜி தான் ஜெயிப்பான் என முதலிலேயே ரிசல்டை அறிவித்தார் நிஷா.

பிக் பாஸ் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்தார். பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் லிஸ்ட் டாஸ்கில் முதலிடத்தை பிடித்த ரம்யாவிற்கு பரிசாக அடுத்த வார தலைவருக்கான போட்டியில் இருக்கும் பாலாஜி, நிஷா, சோம் என மூவரில் யாரையாவது ஒருவரையோ அல்லது இருவரையோ மாற்றலாம் என்பதை பரிசாக அறிவித்தார். இந்த பரிசு ரம்யாவிற்கு ஏமாற்றமாகவே தான் இருந்தது.

அதை பயன்படுத்தி பாலாஜி, சோமை விட்டுவிட்டு நிஷாவின் இடத்தை பறித்து எந்த ஒரு பிரச்சினைகளிலும் நியாயமாக நடந்து கொண்டதாக கூறி சம்யுக்தாவை தேர்வு செய்தார் ரம்யா. அதையடுத்து கேப்டன் பதவிக்கான போட்டி அறிவிக்கப்பட்டு, அதில் எந்த விதிமுறைகளும் கிடையாது என்று பிக் பாஸ் கூறினார். கார்டன் ஏரியாவில் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் பந்துகளை அவர்களின் எதிர்பக்கம் இருக்கும் போட்டியாளர்களின் மீது எறிய அவர்கள் அதை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

போதும்ப்பா.. ரஜினியை விட்டுவிட்டு சசிகலா பக்கம் ரூட்டை மாற்றுகிறதா பாஜக.. இனிதான் ஆட்டம் ஆரம்பமே

அதில் பாலாஜி தனியாக ஒரு பிளான் போட்டு தான் சேகரித்த பந்துகளை சம்யுக்தாவின் கூடைகளில் போட்டு அவரை ஜெயிக்க வைத்தார். பாலாஜியின் சாணக்கியத்தனத்தால் சம்யுக்தா வெற்றி பெற்று அடுத்த வார கேப்டனாக தேர்வானார்.

கார்டன் ஏரியாவில் பேஷன் ஷோ நடந்தது. இரண்டு இரண்டு நபராக அணிவகுத்து ஜோடியாக மேடை ஏறி கலாசலா கலசலா என்ற பாடலுக்கு அவரவர் ஸ்டைலில் நடனமாடினர். அதில் முதலில் மேடை ஏறிய அப்பா, மகள் ஜோடியான சுரேஷ் மற்றும் அர்ச்சனா கலக்கலாக ஆடினர். தொடர்ந்து வந்த சம்யுக்தா, வேல்முருகன் ஜோடி, ஜித்தன் ரமேஷ், சனம் ஜோடியும் அவர்களது பாணியில் ஆடிச் சென்றனர்.

ரம்யா பாண்டியன், ஆஜித் அக்கா, தம்பியாக குறும்புத்தனத்துடன் தங்களுடைய நடனத்தை வெளிப்படுத்தினர், ரியோ மற்றும் நிஷா பழைய பாடலின் பாணியில் ஆடி அசத்தினர். கேப்ரில்லா, சோம் என அனைவரும் ஆடி மகிழ்ந்தனர். இதில் ஆரி மற்றும் அனிதா மட்டும் தான் மிஸ்ஸிங் அவர்கள் ஜெயிலுக்குள் இருந்ததால் ஆட முடியாமல் போய்விட்டது.

பாலாஜியும், ஷிவானியும் ஜோடிதான் ஜெயிப்பார்கள் என்று ஆடியன்ஸ் நினைத்திருந்தனர். ஆனால் அதில் அப்பா, மகள் ஜோடியான அர்ச்சனா மற்றும் சுரேஷை வின்னராக அறிவித்தனர். இந்த ட்விஸ்ட் யாருமே எதிர்பாராதது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
While everyone is expecting Balaji and Shivani to win in the fashion show, the Suresh Archana couple has come as a father and daughter and won with a stunning punch. No one would have expected this pair to win.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X