• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அனல் வீசும் அரசியல்.. ஆவேச பதில் கொடுக்கும் சூர்யா.. பிஜிஎம் வேற லெவல்.. சூரரை போற்று டிரைலர் நச்!

Google Oneindia Tamil News

சென்னை: அனல் பறக்கும் வசனங்கள்.. ஆவேசமான பின்னணி இசையுடன் youtube டிரெண்டிங்கில் நம்பர் ஒன், இடத்தை ரிலீஸ் ஆன கொஞ்ச நேரத்திலேயே பிடித்துள்ளது சூரரை போற்று டிரைலர்.

சுதா கோங்கரா, இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சூரரைப்போற்று.

வெகுநாட்களாக தியேட்டரில் வெளியிடுவதா, இணையதளத்தில் வெளியிடுவதா என்ற பஞ்சாயத்து காரணமாக பரபரப்பை ஏற்படுத்திய படம்தான் இது.

சாயங்காலம் ஆயிருச்சு.. எதுவும் வரலையே.. போயஸ் பக்கமே திரும்பித் திரும்பிப் பார்க்கும் ரசிகர்கள்! சாயங்காலம் ஆயிருச்சு.. எதுவும் வரலையே.. போயஸ் பக்கமே திரும்பித் திரும்பிப் பார்க்கும் ரசிகர்கள்!

சூரரை போற்று ரிலீஸ் தேதி

சூரரை போற்று ரிலீஸ் தேதி

இந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது. அக்டோபர் மாதம் 30ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்திற்கு விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஆனது. எனவே திட்டமிட்டபடி 30-ம் தேதி படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது. விமானப் படைத் தரப்பில் தடை இல்லாத சான்றிதழ் கிடைத்துவிட்டது. இருப்பினும் படம் எப்போது ரிலீசாகும் என்று அறிவிக்கப்படவில்லை. தீபாவளி தினத்தில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் திரைப்படம், நவம்பர் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்.

சவாலை சமாளிக்கும் ஹீரோ

சவாலை சமாளிக்கும் ஹீரோ

இந்த நிலையில்தான் அமேசான் பிரைம், திரைப்படத்துக்கான டிரைலரை வெளியிட்டது. கேப்டன் கோபிநாத் எவ்வாறு ஏர் டெக்கன் ஏர்வேஸ் துவங்கி அதை மக்களிடம் கொண்டு சேர்த்தார், என்பது பற்றிய படம் என்பதால், 2 நிமிட டிரைலரிலேயே, அவர் பட்ட துயரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து விட்டனர். வெறும் துயரம் கிடையாது. அவை அனைத்துமே கதாநாயகனால் சவாலாக எதிர் கொள்ளப்பட்டதாக காட்சி அமைப்பு இருப்பதை கவனிக்க முடிகிறது.

அனல் பறக்கும் டயலாக்குகள்

அனல் பறக்கும் டயலாக்குகள்

ஏரோட்டுவோரும் ஏரோப்ளேனில் போவான்.. என்ற அதிரடி டயலாக்குடன் சூர்யா போர்ஷன் ஆரம்பிக்கிறது. உன்னுடைய ரெகமெண்டேஷன் கடிதத்தில் கையெழுத்து போட முடிந்தாலும் நான் போட மாட்டேன் என்று பக்தவச்சலம் நாயுடு என்ற பெயரிலான ஏர் கமாண்டர் அதிகாரி கூறுவது போல ஒரு காட்சி உள்ளது.

 அரசியல்

அரசியல்

போட்டி விமான நிறுவனங்களின் முதலாளிகள் சூர்யா மீது வெறுப்பை உமிழ்வது போலவும், அவர் வீழ்ந்துவிட வேண்டுமென்று திட்டமிட்டு அரசியல் செய்வது போலவும் காட்சிகள் உள்ளன. வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு ராணுவ உடையில் கம்பீரமாக காட்சியளிக்கிறார் சூர்யா. அதே இளமை அப்படியே இருக்கிறது. மேலும், ஒரு அதிகாரி, "இங்கிருந்து டெல்லி வரைக்கும் எழுதுவீர்களா" என்று சூர்யாவை கேட்பது போல காட்சி அமைந்துள்ளது. இது நடப்பு அரசியலில் சூர்யாவை சுற்றியுள்ள சர்ச்சைகளையும் இந்த டயலாக்கையும் இணைத்துப் பார்க்க வைப்பது போல இருக்கிறது.

அவங்க அப்பன் வீட்டு சொத்தா

அவங்க அப்பன் வீட்டு சொத்தா

வானம் என்ன.. அவங்க அப்பன் வீட்டு சொத்தா.. பிளைட்டை இறக்குடா.. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சூர்யா அதிரடி டயலாக் சொல்ல.. விமானத்தின் சக்கரங்கள் வெளியே நீள.., இந்த கூஸ்பம்ப் காட்சிக்கு மேலும் வெறியேற்றுகிறது பின்னணி இசை. கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாறு படம் என்பதை விட இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கும் அளவுக்கு பின்னணி இசை பட்டையை கிளப்பி உள்ளது.

நாமளே கட்டிக்கலாம்

நாமளே கட்டிக்கலாம்

காதல் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. "ஊரைப் பொறுத்த வரைக்கும் நீ ஒரு கிறுக்கி.. நான் ஒரு கிறுக்கன். பேசாம நாமளே கட்டிக்கலாம்" என்ற வசனம் இளசுகளின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மெட்டீரியலாக மாறிவிட்டது. ஆக மொத்தம் எந்தவிதத்திலும் குறைவில்லாமல் உள்ளது டிரைல். ஒவ்வொரு காட்சியையும் பாஸ் செய்து நிறுத்திப் பார்த்தால் பின்னணியில் அத்தனை டீட்டைல் தெரிகிற முழுமையான டிரைலராக உள்ளது. ஆக மொத்தம் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளது சூரரைப்போற்று டீம்.

English summary
Soorarai Pottru trailer review: Amazon prime video India has been released Soorarai Pottru trailer, which is acted by Surya, Aparna, directed by Sudha Kongara, music by GV Prakash. This film will be released on November 12 on Amazon prime video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X